சரஹா அப்ளிகேஷன் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது…!!
சரஹா என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது. இந்த சரஹா அப்ளிகேஷன் ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது . யாரிடமிருந்து மெசெஜ் வரப்பட்டது, எங்கிருந்து வரப்பட்டது என தெரியாது. மேலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்ரினா காலின்ஸ் என்ற இளம் பெண் பாலியல் தொந்தரவு கொடுக்கும் விதமாக மெசேஜ்கள்(குறுஞ்செய்திகள்) தனக்கு வந்து குவிகின்றன என்று கூறி சரஹாவை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என்று இணையத்தில் மனு (Petition) ஒன்றை அளித்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக அவர் உருவாக்கிய மனுவில் சுமார் 4.7 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து சரஹாவை நீக்கிவிட்டது.