மடிக்கக்கூடிய கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். அதன்படி இந்தியாவில் மடிக்கக்கூடிய திறமைக் கொண்ட கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் நிறுவனமானது, அதன் கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அக்கருவி மடங்க கூடியதொரு வடிவமைப்பை கொண்டிருக்குமென்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. சாம்சங் கேலக்ஸி எக்ஸ் பற்றிய வதந்திகள் வால் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் மூலம் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்பிள் நிறுவனமும் விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப
வசதிகளை கொண்டு ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம், இந்த ஆண்டு அல்லது 2019-ல் சாம்சங் நிறுவனத்தின் முதல் மற்றும் உண்மையான போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எக்ஸ் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியாகினும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நமது கைகளில், மடங்க கூடிய ஒரு பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் தவழும் என்பது மட்டும் உறுதி. கோட்பாட்டளவில், போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஒரு டேப்ளெட் போன்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் மடிக்கக்கூடிய சாம்சங் கேலக்ஸி எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 7.3-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுமொரு தொழில்நுட்பமாகும்.