சாம்சங் கேலக்ஸி ஜே8 (Samsung Galaxy J8) அறிமுகம்.!

Default Image

 

ஸ்மார்ட்போன்களில் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே8(Samsung’s Galaxy J8)(2018) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் புதிய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே8(2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7885 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது.கேலக்ஸி ஜே8(2018 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samsung’s Galaxy J8

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்