அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி எஸ்9 , எஸ்9+(Samsung Galaxy S9 , S9+) ஸ்மார்ட்போன்கள்..!
சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்9 , எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் ஒரு புதுமை மிக்க கண்டுபிடிப்பு ஆகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமரா பற்றி அதிகம் பேசப்பட்டது. வெளியான பின்னர், . எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமராக்களின், லோ லைட் ஷார்ட்ஸ், சூப்பர் ஸ்லோ- மோ வீடியோக்கள், ஏஆர் எமோஜிஸ் என பல காரங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
ஒரு முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படமானது சிறந்த முறையிலான ஒளியை பெற்றுள்ளது என்பதை எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் டூயல் அப்பெர்ஷர் உறுதி செய்கிறது. இதன் இரண்டு எப் ஸ்டாப் முறைகள் ஆனது மனித கண்களை போன்றே, தானாகவே வெவ்வேறு ஒளி நிலைமைகளை ஏற்றுக்கொள்ளும். இதன் பின்புற எப்1.5 துளை ஆனது குறைந்த வெளிச்சத்திலும் கூட, பிரகாசமான மற்றும் தெளிவான புகைப்பட பதிவை உறுதிப்படுத்துகிறது.
மறுபுறம், அதாவது பகல் நேரத்தில் புகைப்படங்கள் மிக கூர்மையாக வெளியே வர உதவுவதற்கு இதன் எப்2.4 துளை உதவும். கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராக்கள், சூப்பர் ஸ்லோ-மோ அம்சத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. விநாடிக்கு 960 பிரேம்கள் என்கிற விகிதமானது, கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன் கேமராவின் சூப்பர் ஸ்லோ-மோ அம்சத்தினை உண்மையிலேயே ஒவ்வொரு கணமும் கட்சிதமாக பதிவாக்குகிறது.
பதிவாகும் வீடியோக்களுடன் இசையை சேர்ப்பதன் மூலம் உங்கள் கலைப்படைப்பை நீங்கள் வெளிப்படுத்தலாம்.மேலும் ஒரு நேர்த்தியான ஸ்லோ-மோ வீடியோவை உருவாக்க எஸ்9 தொடர் ஸ்மார்ட்போனின் மோஷன் டிடெக்ஷன் திறனும் கைகொடுக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக, உங்களுக்கு பிடித்த சோ-மோ வீடியோவை மீண்டும் மீண்டும் காணும் வண்ணம், அதை உங்களின் லாக் ஸ்க்ரீனாக கூட செட் செய்யும் திறனை எஸ்9 தொடர் வழங்குகிறது.
கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவின் கவனிக்கத்தக்க அம்சங்களில், ஆப்டிக்கல் இமெஜ் ஸ்டெபிலைசேஷனும் ஒன்றாகும். இந்த அம்சமானது, நகரும் சமயத்தில் பதிவாக்கப்பட்ட புகைப்படங்களானது சரியான முறையில் மற்றும் பிரகாசமான ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.