6,000mAh பேட்டரி.. அசத்தலான அம்சங்கள்… புதிய மாடலை அறிமுகம் செய்தது சாம்சங்!

Samsung Galaxy M15

Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வெளியான Galaxy A15 5G ஐப் போலவே உள்ளன.

டிஸ்பிளே மற்றும் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனானது 6.5-இன்ச் முழு-HD+ (1,080×2,340 பிக்சல்கள்) Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. டிஸ்ப்ளேயில் செல்ஃபி ஷூட்டரை வைக்க, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளது.

Galaxy M15 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.கேமரா யூனிட்டில் 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு, 13 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி-யின் ஆரம்ப விலை 4ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் ரூ.12,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் ரூ. 14,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ டோபஸ், செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஸ்டோன் கிரே ஆகிய மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது. HDFC கார்டை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடி வழங்கபடுகிறது.

மற்ற அம்சங்கள்:

  • புதிய கேலக்ஸி எம்-சீரிஸ் ஃபோன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14-இல் இயங்குகிறது. 5 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  •  6,000mAh பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது.
  • இரட்டை நானோ சிம்களை கொண்டுள்ளது.
  • உள் சேமிப்பகத்தை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை விரிவாக்கலாம்.
  • Galaxy M15 5G இல் 5G, GPS, Glonass, Beidou, Galileo, QZSS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.3, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் 21 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 128 மணிநேரம் வரை ஆடியோ பிளேபேக் நேரத்தையும் இந்த பேட்டரி வழங்கும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்