ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! ஆப்பிளுடன் போட்டியா .?
Samsung : சாம்சங் மொபைல் போன்களுக்கு தனி பயனர்களும் ரசிகர்களும் இருக்கும் நிலையில் சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்களும், பயனர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது, சாம்சங் அவர்கள் உருவாகும் ஸ்மார்ட்வாட்சின் வெளிப்புற டிசைனை மாற்ற உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
Read More :- போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ!
சாம்சங் தற்போது, அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வட்ட வடிவிலான வெளிப்புற தோற்றத்தை சதுர வடிவாக மாற்றுவதற்கு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. இப்படி சதுர வடிவிலான கேலக்ஸி ஸ்மார்ட்வாட்சைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கும். இது போன்ற புதிய வடிவமைப்பை கொண்ட ஸ்மார்ட் வாட்சை எப்போது, எங்கு பார்க்கத் தொடங்குவோம் என்று தெரியவில்லை. மேலும், அது கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 7 சீரிஸிலிருந்து அறிமுகமாகுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
சாம்சங் நிறுவனத்திற்கு இது ஒரு சுவாரஸ்யமான மாற்றமாக இருக்கும். ஏனென்றால், நீண்ட காலமாக வட்ட வடிவத்திலே ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறது. மேலும் இப்படி சதுர வடிவமைப்பை கொண்டால் அதனை சதுர வடிவமைப்புடன் வெளியிட்டு கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்சுடன் ஒப்பிடலாம். இது ஒரு தொழில் போட்டியாகவும் சாம்சங் நிறுவனம் கை ஆளும் என பயனர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read More :- AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 சீரியஸை தொடர்ந்து, கடந்த ஆண்டு அதன் வகையான ஒரு ஸ்மார்ட் வாட்ச் மடிக்கக்கூடிய அம்சத்தை கொண்டு சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும், இது போல வியக்கம் அம்சங்களுடன் புதிய கேலக்ஸி வாட்ச் 7 சீரியஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில், அதாவது கேலக்ஸி அன்பேக்ட் (Galaxy Unpacked) எனும் நிகழ்வில் அறிமுகமாகும் என பயனர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. நாம் உண்மையில் ஒரு புதிய வடிவமைப்பை கொண்ட ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என்றால் காத்திருந்து இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 சீரியஸை பெறலாம்.