மே 27 வரை காத்திருங்க.. அறிமுகம் லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக வருகிறது Samsung Galaxy F55 5G.!

Samsung Galaxy F55 5G

Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்திய சந்தையில், கேலக்ஸி எஃப்-சீரிஸின் புதிய மாடலான சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Galaxy F55 5G
Galaxy F55 5G [image – samsung ]
அது குறித்த விளக்கத்தையும் அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள மே 27 வரை காத்திருக்க வேண்டும். இருந்தாலும், இது சில சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது இதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது இரண்டு வண்ணங்களில் கிடக்கிறது, ஒன்று ஆப்ரிகாட் கிரஸ் (Apricot Crush) மற்றொன்று ரைசின் பிளாக் (Raisin Black) ஆகும்.

Galaxy F55 5G
Galaxy F55 5G [image – samsung ]
அது மட்டும் இல்லாமல், இது மிக மெல்லிய ஸ்மார்ட்போன் என்றும், உண்மையான லெதர் பேனலுடன் வருகிறது என்றும் நிறுவனம் கூறுகிறது.

ஸ்க்ரீன்

ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அளவிலான ப்ளூ லைட் மற்றும் 1,000 நிட்ஸ் பிக்சல் காட்சிப்படுத்தும் திறன் உடன் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. இதனால் தெளிவான ஒரு  வீடியோவை நம்மால் பார்க்க முடியும்.

கேமரா

கேமரா என்று வருகையில், OIS ஆதரவுடன் 50MPமெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்- ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மெகாபிக்சல் மேக்ரோவை கொண்டுள்ளது. இது போக முன்பக்க கேமரா செல்ஃபி மற்றும் வீடியோவுக்காக 50MP மெகாபிக்சல் ஷூட்டர் இடம்பெறும்.

பேட்டரி

5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது, இதனை 45 வாட்ஸ் சார்ஜிங் USB-C கேபிள் வழியாக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

Galaxy F55 5G
Galaxy F55 5G [image – samsung ]
ஓஎஸ் மற்றும் பிற விவரங்கள் :

இந்த ஸ்மார்ட் ஃபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) 7 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6.0 உடன் இயங்கும். மேலும் இது சிறந்த ஆடியோ, என்எப்சி, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றிற்கான டால்பி அட்மோஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது.

Galaxy F55 5G
Galaxy F55 5G [image – samsung ]

விலை

இதன் ஆரம்ப விலை ரூ.2X999 ஆக இருக்கலாம் என்று நிறுவனம் சஸ்பென்சாக  தெரிவித்துள்ளது. இதனால்,12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய டாப்-எண்ட் வேரியன்டின் விலை ரூ.20,000 முதல் ரூ.29,999 வரை இருக்கும் என தெரிகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
22.11.2024 Power Cut Details
tulsi (1) (1) (1)
Goutam Adani
dhanush aishwarya
devdutt padikkal kl rahul