தொழில்நுட்பம்

சாம்சங் பிரியர்களே..! 108MP கேமரா, 6,000mAh பேட்டரியில் புதிய கேலக்ஸி சீரிஸ் அறிமுகம்…

Published by
கெளதம்

ஸ்மார்ட் போன்களில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய போன் என்றால் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) என்று கூறலாம். தற்போது, சாம்சங் நிறுவனம் தனது எஃப் சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட் ஃபோனை, இந்தியாவில் வெளியிட உள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது, இந்நிலையில் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, வரவிருக்கும் சாம்சங் 5G தொலைபேசியின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளது.

Samsung Galaxy F54 5G [Image source: @yabhishekhd]

புதிய ‘Samsung Galaxy F54 5G’ போன் இந்தியாவில் ரூ.28,499 ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம்சங் இரண்டு விலைகளில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டோரேஜின் மாறுபாடு படி, விலையும் மாறுபடும். ஜூன் 6 ஆம் தேதி சாம்சங் தனது புதிய 5G ஃபோனை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது தான்  ​​விலைப் பற்றி தெளிவு வரும்.

Samsung Galaxy F54 5G [Image source: @yabhishekhd]
கேலக்ஸி F54 போன் பற்றிய சில விவரங்கள்:

  • வரவிருக்கும் Samsung Galaxy F54 ஃபோனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி இடம்பெறும்.
  • Samsung Galaxy F54 ஆனது நான்கு வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்களைப் பெற தகுதியுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • 6.7 இன்ச் சூப்பர் FHD+AMOLED பிளஸ் டிஸ்ப்ளேவைப் பெறலாம், இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும்.
  • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.
  • இது Octacore Exynos 1380 செயலியைப் பெறும்.
  • பின் புற கேமராவில் முக்கிய லென்ஸ் 108MP ஆக இருக்கும். இது தவிர, அதில் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.
  • மேலும், முன்பக்கம் 32MP கொண்ட செல்ஃபி கேமராவை அந்நிறுவனம் வழங்குகிறது.
Samsung Galaxy F54 5G [Image source: @yabhishekhd]

முன்பதிவு:

சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி மாடலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. Flipkar மற்றும் Samsung அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பயனாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 999 ரூபாய் செலுத்தி பயனர்கள் செல்போனை முன்பதிவு செய்யலாம்  எனவும், அவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2000 சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

10 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

10 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

11 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

11 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

12 hours ago