பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும்.

அதாவது, அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த Samsung Galaxy F15 5G போன் ஏற்கனவே, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த மாடல் 8 ஜிபி ரேமில் கிடைக்கிறது.

SAMSUNG Galaxy F15
SAMSUNG Galaxy F15 [file image]
Galaxy F15 5G ஆனது ஆஸ் பிளாக் (Ash Black) க்ருவி வைலட் (Groovy Violet) மற்றும் சாக்ஷி க்ரீன் (Jazzy Green) ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய மூன்று வேரியண்ட் கொண்ட மாடல்களும்  பிலிப்கார்டில் விற்பனைக்கு வந்த விலையில் இருந்து ரூ.2000 தள்ளுபடி ஆப்பரில் கிடைக்கிறது.

அதன்படி, தற்போது அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Samsung Galaxy F15 5G விலை

இதன் புதிய வேரியண்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.15,999 எனவும், அதேசமயம் போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.12,999 விலையிலும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.14,499 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Samsung Galaxy F15 5G
SAMSUNG Galaxy F15 [file image]

சிறப்பம்சங்கள்

  • 6.5-இன்ச் அளவிலான முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இதன் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.
  • இந்த போன் வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (VDIS) அம்சத்துடன் கூடிய 50MP டிரிபிள் கேமரா மற்றும் செல்ஃபிக்களுக்கான 13MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இதன் முலம் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
  • இந்த ஸ்மார்ட்போன் மடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) மூலம் இயங்கும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.
  • 25W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 6000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை இயங்கும் எனவும், 25 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
  • இது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 5.0 ஐக் கொண்டுள்ளது.
  • 5ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.3, GPS மற்றும் யுஎஸ்பி Type-C உள்ளிட் கனெக்டிவிட்டி களை கொண்டுள்ளது. மேலும் இதில்1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.

பட்ஜெட் விலையில் மேல் குறிப்பிட்டபடி அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்கி பயன் பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்