சாம்சங்கின் புதிய கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ..! எப்போ அறிமுகம் தெரியுமா.?

GalaxyBuds3Pro

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் அதன் ரசிகர்களுக்காக ஃபேன் எடிஷன் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தியது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 4ம் தேதி மிட் ரேஞ்ச் விலையில் ஃபேன் எடிஷன் சீரிஸில் எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், டேப் எஸ்9 எஃப்இ மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ போன்றவற்றை உலக அளவில் அறிமுகப்படுத்தியது.

இதில் குறிப்பாக இந்த ஆண்டில் சாம்சங் நிறைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், கேலக்ஸி பட்ஸ் எஃப்இ மட்டுமே இந்த ஆண்டு சாம்சங் அறிமுகப்படுத்திய இயர்பட்ஸ் ஆகும். ஆனால் அடுத்த ஆண்டு தனது புதிய உயர்தர கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவை சாம்சங் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோவின் வாரிசாகும். கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் தற்போது அறியப்படாத நிலையில், இந்த புதிய இயர்பட்கள் அடுத்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ ஆனது அறிமுகப்படுத்தப்பட்டபோது மிகவும் பிரபலமாக இருந்தது. இதில் இருப்பது போலவே ஒலியின் தரம், நாய்ஸ் கேன்சல் மற்றும் பேட்டரி திறன் போன்றவற்றை கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவிழும் பயனர்கள் எதிர்பார்க்கலாம். பட்ஸ் 2 ப்ரோவில் ஸ்டராங் பேஸ் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல் (ANC) கொண்ட டூ-வே ஸ்பீக்கர்கள் உள்ளன.

ஒவ்வொரு இயர்பட்களிலும் 61 mAh பேட்டரி உள்ளது. மேலும் கேஸில் 515 mAh பேட்டரி உள்ளது. இந்த இயர்பட்ஸில் ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருந்தால் 5 மணிநேரம் வரையும், கேஸுடன் 18 மணிநேரம் வரையும் பயன்படுத்தலாம். ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டிருந்தால் 8 மணிநேரம் வரையும், கேஸுடன் 29 மணிநேரம் வரையும் பயன்படுத்தலாம்.

மேலும், ஐபிஎக்ஸ்7 (IPX7) வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட், டச் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் உள்ள புளூடூத் 5.3 மூலம் மொபைலில் எளிதாக இணைக்க முடியும். அதோடு 3 மைக்ரோஃபோன்களும் உள்ளன. இந்த கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ இயர்பட்ஸ் ஆனது ரூ.16,990 என்ற விலையில் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்