Samsung Galaxy Book 4: சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது.
இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. அதாவது, இந்த புதிய லேப்டாப்பில் இன்டெல் கோர் அல்ட்ரா செயலிகள் இல்லை. ஆனால், புகைப்பட ரீமாஸ்டரிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற பணிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய AI மூலம் இயங்கும் அம்சங்களை இந்த Samsung Galaxy Book 4 லேப்டாப் கொண்டுள்ளது.
இந்த புதிய மாடல் லேப்டாப் Samsung India இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த Galaxy Book 4 ஆனது இந்தியாவில் கிரே மற்றும் சில்வர் ஆகிய இரண்டு நிற விருப்பங்கள் மற்றும் வெவ்வேறு CPU மற்றும் RAM உள்ளிட்ட வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Intel Core i5 CPU 8GB RAM கொண்ட Samsung Galaxy Book 4 லேப்டாப்பின் விலை ரூ.70,990இல் தொடங்குகிறது.
அதேபோல் 16 ஜிபி ரேம் மற்றும் அதே ப்ராசஸர் கொண்ட மாடலின் விலை ரூ.75,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, Galaxy Book 4-இன் Intel Core i7 மற்றும் 16GB RAM கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.85,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…
ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில்…
பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில்…
சென்னை : சென்னையில் கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற "Bottle Radha" இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின்…
விழுப்புரம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், பெரியார் கூட்டமைப்பு…
சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக்…