புதிய குழுவின் ஆதரவுடன் ஓபன்ஏஐ-க்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன்..! சாம் ஆல்ட்மேன்

Sam Altman open Ai

ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் கூறி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது.

சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டார்.

இதன்பிறகு ஓபன் ஏஐ முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, புதிய ஏஐ ஆராய்ச்சி குழுவை வழிநடத்துவார்கள் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.

நிர்வாகக் குழு ராஜினாமா செய்ய வேண்டும்.. இல்லையெனில்.? ஓபன் ஏஐ ஊழியர்கள் அச்சுறுத்தல்,.!

இருந்தும் சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஓபன் ஏஐ நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஓபன்ஏஐ இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் பதவி விலகவில்லை என்றால் தாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகவும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து ஓபன்ஏஐ, சாம் ஆல்ட்மேனை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், சாம் ஆல்ட்மேனை சிஇஓ பதவியிலிருந்து நீக்கிய இயக்குனர்கள் குழு மொத்தமாக கலைக்கப்பட்டு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஓபன்ஏஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், தான் ஓபன்ஏஐ-ஐ மிகவும் விரும்புவதாகவும், புதிய நிர்வாக இயக்குனர்கள் குழுவுடன் இணைந்து ஓபன்ஏஐ-க்கு வர ஆவலுடன் காத்திருப்பதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில், “நான் ஓபன்ஏஐ-ஐ நேசிக்கிறேன், கடந்த சில நாட்களாக நான் செய்த அனைத்தும் இந்த அணியையும் அதன் பணியையும் ஒன்றாக வைத்திருக்கிறது.”

OpenAI நிறுவன தலைவராக சாம் ஆல்ட்மேன் தொடர்வார்..! அந்நிறுவனம் அறிவிப்பு.!

“நான் மாலை நேரம் மைக்ரோசாப்ட்டில் சேர முடிவு செய்தபோது, எனக்கும் குழுவிற்கும் அதுவே சிறந்த பாதை என்பது தெளிவாகத் தெரிந்தது. புதிய போர்டு மற்றும் சத்யா நாதெல்லாவின் ஆதரவுடன், ஓபன்ஏஐ-க்குத் திரும்பவும், மைக்ரோசாப்ட் உடனான எங்கள் வலுவான கூட்டாண்மையை உருவாக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்