இந்த ஒரு AI போதும்.? ஒரே போட்டோவில் எளிதில் கிராஃபிக்ஸ் செய்யலாம்.!
தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அசுர வளர்ச்சி அடைந்து வரும் தொழிநுட்பமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கோடிங் என பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஏஐ, இப்போது எடிட்டிங்யிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இது கிரியேட்டர்களுக்கு உயர்தர கன்டென்ட்களை உருவாக்குவதை எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்குகிறது. அந்தவகையில் ரன்வே எனப்படும் ஒரு ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மோஷன் பிரஷ் என்ற அம்சத்தை மையமாகக் கொண்ட ரன்வே எம்எல் ஏஐ கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.14,999 பட்ஜெட்டில் 8ஜிபி ரேம்.. 256ஜிபி ஸ்டோரேஜ்..! என்ன போன் தெரியுமா.?
இந்த ஏஐ ஆனது ஒரு படத்தில் இருக்கக்கூடிய உயிரற்ற பொருளுக்கு உயிரோட்டம் தரக்கூடிய ஒன்று. அதாவது, உயிரோட்டமாற்ற படத்தை அனிமேஷன் செய்து வீடியோ போல மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு படத்தில் குருவி ஒன்று அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அதனை இந்த கருவியை பயன்படுத்தி சிறிது அனிமேஷன்கள் மூலம் அசைவது போல செய்ய முடியும்.
இந்த அம்சம் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும், அதை செய்து பார்க்கையில் மிகவும் அற்புதமாக இருக்கும். இதை வைத்து கிரியேட்டர்கள் வேடிக்கையான வீடியோக்களை உருவாக்கி உள்ளனர். நீர்வீழ்ச்சிகள் அசைவது போலவும், மரத்தில் இருக்கும் இலைகள் ஆடுவது போலவும், சாலையில் கார் புழுதியை உருவாக்கிக் கொண்டு வருவது போலவும் உருவாக்கியுள்ளனர்.
இப்போது இந்த ஏஐ-ஐ பயன்படுத்தி எப்படி ஒரு அனிமேஷன் வீடீயோவை உருவாக்கலாம் என்பதைப் பார்ப்போம். முதலில் RunwayML என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கை லாகின் செய்ய வேண்டும். பிறகு ஒரு படத்தை அதில் பதிவேற்ற வேண்டும். பிறகு மோஷன் பிரஷ் என்பதை கிளிக் செய்து, அந்த படத்தில் எந்த பகுதி அசைய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!
பிறகு அதை சேவ் (Save) செய்துவிட்டு ஜெனெரேட் 4s என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து 4 செகண்ட் அனிமேஷன் வீடியோ ஒன்று உருவாகியிருக்கும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மீண்டும் ஜெனெரேட் 4s என்பதைக் கிளிக் செய்தால், வீடியோவின் நீளத்தை 16 வினாடிகள் வரை நீட்டிக்க முடியும்.
இதில் பேசிக், ஸ்டாண்டர்ட்ஸ், ப்ரோ, அன்லிமிடெட் மற்றும் என்டர்பிரைசஸ் என 5 பிளான்கள் உள்ளன. நீங்கள் தேர்தெடுக்கும் பிளானைப் பொறுத்து உங்களுக்கான சேவைகள் கிடைக்கும். பல்வேறு ஏஐ மேஜிக் கருவிகளையும் பெறுவீர்கள். தற்போது, மோஷன் பிரஷ் கருவி பீட்டாவில் உள்ளது. எனவே இது அனைத்து ரன்வே உறுப்பினர்களுக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Motion brush in runway…damn good.
Much better control.
This was very needed.#runwayml #midjourneyV52 #AIArtCommuity #aiart pic.twitter.com/r8ZhM0GnAd
— Rory Flynn (@Ror_Fly) November 24, 2023