Vivo Y100 5G : பட்ஜெட் விலையில் பல அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே விவோ ஒய் 100 5ஜி (Vivo Y100 5G) போன் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இந்தியாவில் அறிமுகமானது.
இப்போது இதே மாடல் இந்தியாவில் உள்ள ஒய் 100 5ஜி ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான வடிவமைப்பு, சிப்செட் மற்றும் பேட்டரி போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிஸ்பிளே
இந்த விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனில் 2400 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 60 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் மல்டி டச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.07 மில்லியன் நிறங்களை ஒன்றாக ஒருங்கிணைத்துக் காட்டக்கூடியது.
இதனால் படங்கள் பார்க்கும்போது சிறப்பான அனுபவம் கிடைக்கும். இது இந்தியாவில் இருக்கும் விவோ ஒய்100 போனை விட 0.4 இன்ச் அதிகமாகும். இந்திய மாடலில் 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.38 இன்ச் அளவுள்ள அமோலெட் டிஸ்பிளே உள்ளது.
பிராசஸர்
அட்ரினோ 619 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓசி என்கிற 5ஜி பிராசஸர் இந்த புதிய விவோ ஒய்100 போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு ஃபன்டச் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது.
ஆனால் இந்திய மாடலில் மாலி ஜி68 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 900 பிராசஸர் உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், அக்சிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், அம்பியன்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
கேமரா
விவோ ஒய்100 5ஜி ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா அடங்கும். செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் லைவ் ஃபோட்டோ, வீடியோ, மைக்ரோ மூவி, 64 மில்லியன் அல்ட்ரா-க்ளியர், பனோரமா, டைனமிக் புகைப்படம், ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.
பேட்டரி
183 கிராம் எடையுள்ள விவோ ஒய்100 5ஜி-யில் 5000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியைச் சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. லியு யுங்கிங், கிளாஸ் ப்ளூ மற்றும் ஸ்டார்ரி நைட் பிளாக் ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ள விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனில் 4 வேரியண்ட்கள் உள்ளன.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
அதன்படி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1399 யுவான் (ரூ.16,100) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1599 யுவான் (ரூ.18,500) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1799 யுவான் (ரூ.20,600) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1999 யுவான் (ரூ.22,700) என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…