OnePlusSmartTV [File Image]
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10 வது ஆண்டு விழா நிறைவை பயனர்களுடன் இனைந்து கொண்டாடும் வகையில், டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரை கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) எனும் விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஆடியோ டிவைஸ்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் டிவிகள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சில சாதனங்களுக்கு ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வரையிலான உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் நான்கு மாடல் ஸ்மார்ட் டிவிகளுக்கு அமேசானில் 19 முதல் 41 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதில் முதலாவதாக 65 இன்ச் யு சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 65யு1எஸ் மாடல் ஆனது 19 சதவீதம் தள்ளுபடியில், ரூ.69,999 -லிருந்து ரூ.56,999 ஆக விற்பனைக்கு உள்ளது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ.13,000 குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி உள்ளது.
அடுத்து, ஒய் சீரிஸில் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32ஒய்1 மாடல் ஆனது 35 சதவீதம் தள்ளுபடியில், ரூ.19,999 -லிருந்து ரூ.12,999 ஆக விற்பனைக்கு உள்ளது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ.7,000 குறைக்கப்பட்டுள்ளது. அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதே ஒய் சீரிஸில் 43 இன்ச் அளவிலான 4K ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 43 ஒய்1எஸ் ப்ரோ மாடல் 38 சதவீதம் தள்ளுபடியில், ரூ.39,999 -லிருந்து ரூ.24,999 ஆக விற்பனைக்கு உள்ளது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ.15,000 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,874 வரை தள்ளுபடி உள்ளது.
நான்காவதாக, க்யூ சீரிஸில் ஹைஎண்ட் மாடலான ஸ்மார்ட் கூகுள் டிவி 65 Q2 ப்ரோ ஆனது ரூ.1,59,999 எனும் அதன் எம்ஆர்பியிலிருந்து, 41 சதவீதம் தள்ளுபடியில் ரூ.94,999 ஆக விற்பனைக்கு உள்ளது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ.65,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையை இன்னமும் குறைப்பதற்கு குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…