முதல் பெண் கதாநாயகி அறிமுகம்.! வெளியானது GTA 6 டிரெய்லர்.!

Grand Theft Auto 6

90ஸ் கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கேம் என்றால் அது கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (ஜிடிஏ) என்று சொல்லலாம். 1997 -ல் அறிமுகமான ஜிடிஏ சீரிஸ் அறிமுகமான நாளில் இருந்து பலரையும் கவர்ந்தது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இந்த விளையாட்டை விரும்பி விளையாட ஆரம்பித்தனர். ஜிடிஏ வைஸ் சிட்டி, சான் அன்ட்ரஸ் என பல பெயர்களுடன் ஜிடிஏ சீரிஸ் கேம்கள் உள்ளன.

இதில் ஜிடிஏ வைஸ் சிட்டியில் 5 கேம்கள் இதுவரை உள்ளன. இப்பொழுது 6 கேம் அதன் அறிமுகத்திற்காக தயாராகி வருகிறது. அதன்படி இந்த கேமை உருவாக்கும் ராக்ஸ்டார் கேம்ஸ் இறுதியாக நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 (Grand Theft Auto VI) ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே இணையங்களில் கசிந்தது. இதனை தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

2 மணி நேரத்தில் யூடியூபில் 11 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்ற இந்த ட்ரெய்லர் அனைவரும் வியக்கும்படி, தற்போதுவரை 39 மில்லியன் (39 கோடி) வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 கேம் 2025ம் ஆண்டில் பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் சீரிஸ் எஸ் ஆகியவற்றில் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஜிடிஏ 6 (GTA 6) பிசிக்கு எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஜிடிஏ 6 ட்ரைலரை பார்க்கையில் மற்ற கேம்களில் இருப்பது போல அல்லாமல் முதல் பெண் கதாநாயகியான லூசியாவை அறிமுகப்படுத்துகிறது. அவர் தொடக்கத்தில் ஒரு சிறையில் இருப்பது போலவும் அவரது ஒரு காதலன் வைஸ் சிட்டியில் இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளிவரும் லூசியா, அவரது காதலன் இருவரும் இணைந்து பல திருட்டு வேலைகளில் ஈடுபடுவதையும் ட்ரெய்லர் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ட்ரெய்ல கேமிங் பிரியர்கள் மத்தியில் மிகவும் வைரலானதை தொடர்ந்து, கேம் வெளியீட்டிற்காக அனைவரும் ஆதரவுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்