ஜப்பான் சாதனை !உலகின் மிகச்சிறிய ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது..
ஜப்பான் உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எஸ்எஸ்520என்கிற ராக்கெட்டை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை விண்ணில் ஏவியது. தகவல் தொடர்பில் உள்ள கோளாறு காரணமாக அந்த ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பி வந்தது. இதனால் 10மீட்டர் நீளம், 50செண்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த ராக்கெட்டை மீண்டும் மேம்படுத்தி அதில் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளைப் பொருத்தினர்.
இந்த ராக்கெட் இன்று உச்சினூரா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் படக்கருவி மூலம் புவிப் பரப்பைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பும் திறன்பெற்றதாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.