Retro Edition: புதிய ரெட்ரோ எடிஷனில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5..! விரைவில் அறிமுகம்.!
கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், அதன் புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து, அக்டோபர் 4ம் தேதி தனது ரசிகர்களுக்காக புதிய கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகப்படுத்தியது.
இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானாலும் பயனர்களிடையே இசட் ஃபிளிப் 5 மற்றும் இசட் ஃபோல்ட் 5 பற்றிய எண்ணமே அதிகமாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் ஆகிய நான்கு வண்ணங்களைத் தவிர, இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனை புதிய வண்ணத்தில் வெளியிட்டு அனைவரையும் சாம்சங் கவர்ந்து வருகிறது.
அந்தவகையில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி புதிய மஞ்சள் நிறத்தில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 போனை வெளியிட்டது. இதில் ஒரு பகுதி மஞ்சள் நிறத்திலும், மற்றொரு பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். தற்போது, இதேபோல சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ரெட்ரோ எடிஷனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்த புதிய ரெட்ரோ எடிஷன் ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இசட் ஃபிளிப் 5 ரெட்ரோ எடிஷன் ஆனது மேட் ஃபினிஷ் ஃபிரேமுடன் கூடிய ஒரு நீல நிறப் பேனலைக் கொண்டிருக்கலாம். இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டதும் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வெளியிடப்படும்.
அதோடு, இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் வெளியாகுமா.? இல்லை, உலக அளவில் வெளியாகுமா.? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதில் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவை கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 போலவே இருக்கும். அதன்படி, இசட் ஃபிளிப் 5 ஆனது 2640 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (17.03 செ.மீ) எஃப்எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் மெயின் டிஸ்ப்ளே உள்ளது.
அதோடு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 x 748 ரெசல்யூஷன் கொண்ட 3.4 (8.61 செ.மீ) இன்ச் அளவுள்ள சூப்பர் அமோலெட் கவர் டிஸ்ப்ளே உள்ளது. இதில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்கக்கூடிய ஒன் யுஐ 5 உள்ளது.
இதன் பின்புறத்தில் 12 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 12 எம்பி கேமரா மற்றும் செல்ஃபிக்காக 10 எம்பி கேமரா உள்ளது. 187 கிராம் எடையுள்ள இசட் ஃபிளிப் 5-ல் 3,700 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கூடவே யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5-ல் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மற்றும் 512 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. இதில் 256 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் ரூ.99,999 என்ற விலையிலும், 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,09,999 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதனை சாம்சங் ஸ்டோர் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் வாங்கிகொள்ளலாம்.