இன்ஃபோசிஸில் ராஜினாமா; டெக் மஹிந்திராவில் சிஇஓ ஆன மோஹித் ஜோஷி.!
மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தின் எம்.டி(MD) மற்றும் சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக நியமிக்கப்பட்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நீண்டகாலமாக பணியாற்றிய, அதன் தலைவர் மோஹித் ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இதனையடுத்து தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸின் முன்னாள் தலைவர் மோஹித் ஜோஷியை வரும் 5 ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும்(MD), தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) மற்றும் முக்கிய நிர்வாகப் பணியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 19 அன்று சி பி குர்னானி, ஓய்வு பெற்ற பிறகு அவரிடமிருந்து தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.