நாம் ஒரு லேப்டாப்பை நமக்கென சொந்தமாக வாங்கி வேண்டுமென்றால், குறைந்தது ரூ.50,000 தேவைப்படும். ஆனால் இப்போது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, ஒரு ‘கிளவுட் லேப்டாப்பை’ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.15,000 ஆக இருக்கலாம்.
இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 வரை செலவானது குறைகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கிளவுட் லேப்டாப்பை இந்திய சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் எச்பி (HP), ஏசர் (Acer), லெனோவோ (Lenovo) போன்ற முன்னணி லேப்டாப் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஜியோவின் இரண்டாவது மடிக்கணினியாக இருக்கும் இந்த கிளவுட் லேப்டாப்பிற்க்கான சோதனைகள் எச்பி குரோம்புக்கில் நடத்தப்படுகின்றன. இதில் பயனர்கள் அனைத்து சேவைகளையும் விரைவான வேகத்தில் அணுகமுடியும். ஜியோ கிளவுட் லேப்டாப்க்கான மாதாந்திர சந்தாவை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதச் சந்தாவிற்கான விலை பின்னர் முடிவு செய்யப்படும்.
புதிய லேப்டாப்பை வாங்க விரும்பாதவர்கள், கம்ப்யூட்டிங் அம்சங்களை அணுகுவதற்கு கிளவுட் பிசி சாப்ட்வேரை எந்த டெஸ்க்டாப்பிலும் அல்லது ஸ்மார்ட் டிவியிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இந்த மடிக்கணினியின் விலை அதன் ஸ்டோரேஜ், செயலாக்க சக்தி, பிராசஸர், பேட்டரி போன்றவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி, 16,499 ரூபாய் என்ற பட்ஜெட் விலையில் 4ஜி லேப்டாப்பான ஜியோபுக்கை வெளியிட்டது. இந்த ஜியோபுக் ஜியோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இருப்பினும், புதிய கிளவுட் லேப்டாப் விண்டோஸ் உட்பட பல்வேறு ஓஎஸ்களில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…