ரிலையன்ஸ் ஜியோவின் புதிய மலிவு விலை ‘கிளவுட் லேப்டாப்’.! விரைவில் அறிமுகம்.!

JioCloudLaptop

நாம் ஒரு லேப்டாப்பை நமக்கென சொந்தமாக வாங்கி வேண்டுமென்றால், குறைந்தது ரூ.50,000 தேவைப்படும். ஆனால் இப்போது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, ஒரு ‘கிளவுட் லேப்டாப்பை’ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.15,000 ஆக இருக்கலாம்.

இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 வரை செலவானது குறைகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கிளவுட் லேப்டாப்பை இந்திய சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் எச்பி (HP), ஏசர் (Acer), லெனோவோ (Lenovo)  போன்ற முன்னணி லேப்டாப் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

ஜியோவின் இரண்டாவது மடிக்கணினியாக இருக்கும் இந்த கிளவுட் லேப்டாப்பிற்க்கான சோதனைகள் எச்பி குரோம்புக்கில் நடத்தப்படுகின்றன. இதில் பயனர்கள் அனைத்து சேவைகளையும் விரைவான வேகத்தில் அணுகமுடியும். ஜியோ கிளவுட் லேப்டாப்க்கான மாதாந்திர சந்தாவை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதச் சந்தாவிற்கான விலை பின்னர் முடிவு செய்யப்படும்.

புதிய லேப்டாப்பை வாங்க விரும்பாதவர்கள், கம்ப்யூட்டிங் அம்சங்களை அணுகுவதற்கு கிளவுட் பிசி சாப்ட்வேரை எந்த டெஸ்க்டாப்பிலும் அல்லது ஸ்மார்ட் டிவியிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இந்த மடிக்கணினியின் விலை அதன் ஸ்டோரேஜ், செயலாக்க சக்தி, பிராசஸர், பேட்டரி போன்றவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் AI சாட் போட்.! மெட்டா நிறுவனம் அசத்தல்.!

மேலும், கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி, 16,499 ரூபாய் என்ற பட்ஜெட் விலையில் 4ஜி லேப்டாப்பான ஜியோபுக்கை வெளியிட்டது. இந்த ஜியோபுக் ஜியோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இருப்பினும், புதிய கிளவுட் லேப்டாப் விண்டோஸ் உட்பட பல்வேறு ஓஎஸ்களில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்