முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை !!
ஜியோ: இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தங்கள் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் கூகுள் போன்ற பிரபலமான இணையதளங்கள், ஆப்ஸ்களை அணுக முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான டவுன்டெக்டரின் (Downdetector) படி, 55% சதிவேதம் பேர் ஜியோ ஃபைபர் மூலமாகவும், 40% சதவீதம் பேர் ஜியோ இன்டர்நெட் மூலமாகவும், 6% சதவீதம் பேர் மொபைல் மூலமாகவும் இந்த சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த சேவைகளுக்கு வெளிப்படையான இடையூறுகள் இருந்தபோதிலும், செயலிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை ஜியோ இன்னும் வெளியிடவில்லை.
இதனால் இணையத்தில் பலர் மீம்ஸ்களைப் பகிர்ந்து ரிலையன்ஸ் ஜியோவை கேலி செய்து வருகின்றனர். இந்த பரவலான இடையூறுக்கான சரியான காரணம் தற்போது தெரியவில்லை, மேலும் இதற்கான தீர்வும், இதற்கான காரணமும் குறித்தும் ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பார்கள் என பயணர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.