சைலென்ட் ஆகா மூவ் பண்ணும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்..!!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 4ஜி லேப்டாப்பை வெளியிடும் என்கிற தகவல் வெளியானது. ஆனால் அம்பானியிடம் வேறு சில திட்டங்கள் உள்ளன என்பது போல் தெரிகிறது.அத்தகு வேறு ஒன்றும் இல்லை ஜியோ டிடிஎச் சேவை தான்.
4-ஜி வயர்லெஸ் சேவைகளுக்கான பான்-இந்தியா உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான செட்-டாப்-பாக்ஸை அறிமுகம் செய்தால் இந்திய டிடிஎச் துறையில் பணம் பார்த்து கொண்டிருக்கும் இதர டிடிஎச் நிறுவனங்களான டாடா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பது உறுதி.
இது நாள் வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஜியோ டிடிஎச் சேவையானது, செட் டாப் பாக்ஸ்களை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவை பிராட்பேண்ட் மற்றும் டிவி சேவைகளையும் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கூறியதுபோல், ஜியோ செட் டாப் பாக்ஸ்கள் ஆண்ட்ராய்டு கொண்டு இயக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய எஸ்டிபி (செட் டாப் பாக்ஸ்) சேவை எவ்வாறு செயல்படும் என்று கேட்டால் – ஜியோவின் நெருங்கிய கோபுரத்துடன் கஸ்டமர் பிரிமீஸ் எக்யூப்மென்ட் (customer premise equipment) இணைக்கப்படும். பின்னர் ஒரு வயர் வழியாக பயனரின் வீடு மற்றும் கஸ்டமர் பிரிமீஸ் எக்யூப்மென்ட் இணைக்கப்படும். இந்த வலையமைப்பு லைவ் டிவி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை அடைய எஸ்டிபி (செட் டாப் பாக்ஸ்) உடன் இணைக்கப்படும்.
சிபிஇ (கஸ்டமர் பிரிமீஸ் எக்யூப்மென்ட்) இணைப்பு தவிர, குறைவான சிக்னல் வலிமை கொண்ட இடங்களை, ஜியோ அதன் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கை (FTTH) கொண்டு இணைக்க திட்டமிட்டுள்ளது. இவ்வண்ணம், இந்தியா முழுக்க ஜியோ லைவ் டிவி சேவையின் கீழ் ஆரம்பத்தில் 300+ சேனல்களும், பின்னர் இன்னும் பல சேனல்களும் இணைக்கப்பெறும்.
வரவிருக்கும் ஜியோ எஸ்டிபி-யில், கவர்ந்திழுக்கும் அம்சம் ஒன்றும் இடம்பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘கேட்ச் அப்’ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட அம்சமானது, கடந்த ஏழு நாட்களில், நீங்கள் தொடர்ச்சியாக காணும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்காணிக்கும். இது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை பதிவு செய்யும் வேலையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.