ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payment Bank) ஆனது நேற்று முதல் (செவ்வாய்) தனது சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவையின் பிரதான நோக்கம் நிதி சேர்க்கை (financial inclusion) ஆகும்.
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியானது, ரூ.1 லட்சத்திற்கு மேலான டெபாசிட்களை ஏற்காது என்பதும், முன்னர் குறிப்பிட்டபடி ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது எந்த விதமான கிரெடிட் கார்டுகளை வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், டெபிட் கார்டுகள் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமான விஷயமாக, ஒரு ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறக்க, குறிப்பிட்ட வாடிக்கையாளரின் ஆதார் அட்டை வேண்டும். அதாவது அக்கவுண்ட் திறக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்களின் 12-இலக்க ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி, இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ. (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமாகும். பங்களிப்பை பொறுத்தவரை ஜியோவிற்கு 70 சதவீத பங்குகளும், மீதமுள்ள 30 சதவீத பங்கு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் (எஸ்.பி.ஐ.) உள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (Banking Regulation Act), 1949, பிரிவு 22 (1)-ன் கீழ், ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்த வங்கி சேவைக்கான ஒப்புதலை கடந்த ஆகஸ்ட் 19, 2015 அன்று, ஆர்பிஐ-யிடம் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. இதேபோன்ற ஒப்புதலை பெற்ற இதர பெரு நிறுவனங்களை பொறுத்தவரை, ஆதித்ய பிர்லா நுவோ, பார்தி ஏர்டெல், டிபார்ட்மென்ட் ஆப் போஸ்ட், டெக் மஹிந்த்ரா மற்றும் வோடபோன் ஆகியவை அடங்கும்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…