தொழில்நுட்பம்

12 ஜிபி ரேம்.. 108 எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.!அறிமுகமானது ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ.!

Published by
செந்தில்குமார்

பட்ஜெட் விலைக்கு அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக மாறிய ரெட்மி நிறுவனம், அதன் புதிய ​​ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 13 சீரிஸில் ரெட்மி நோட் 13, நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ + என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் விலையில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதே ஸ்மார்ட்போன் போகோ எக்ஸ்6 நியோ என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.. எப்போ தெரியுமா.?

டிஸ்பிளே

ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ ஆனது 6.74 இன்ச் (16.94 செமீ) அளவுள்ள டாட் பன்ச் கட்அவுட் ஓஎல்இடி பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷனுடன், 60 முதல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. நீர் மாற்று தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.

பிராசஸர்

மாலி-ஜி57 எம்பி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது.

பாதுகாப்பிற்காக சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக் அம்சம் உள்ளது. போனின் கூடுதல் அம்சங்களில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி சப்போர்ட், ஜிபிஎஸ், வைஃபை 5, புளூடூத் 5.3, கைரேகை சென்சார், ஒரு IR பிளாஸ்டர் மற்றும் பல உள்ளன.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பின் படி, பின்புறம் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 16 எம்பி செல்ஃபி கேமராப் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். சூப்பர் நைட் சீன், ஃபிலிம் மோட், ஃபிலிம் பில்டர், எச்டிஆர் மோட், நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், ஏஐ வாட்டர்மார்க் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!

பேட்டரி

ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோவை அதிக நேர பயன்படுத்த 5000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதோடு அதோடு விர்ச்சுவல் கைரோஸ்கோப், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் மற்றும் இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் போன்ற சென்சார்களும் உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

மிட்நைட் பிளாக், டைம் ப்ளூ, மார்னிங் லைட் கோல்ட் என மூன்று வண்ணங்களில் 12 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் + 256 ஜிபி யுஎஃப்எஸ்2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன்​​ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1999 யுவான் (ரூ.23,599) என்ற விலைக்கு, ரெட்மியின் சீன இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!

அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…

23 mins ago

டிரம்புக்கு பிரகாசமாகும் அதிபர் பதவி? ‘எலக்ட்ரால்’ வாக்குகளில் டிரம்ப் முன்னிலை!

வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை! அப்போ கமலா ஹாரிஸ்?

அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…

2 hours ago

அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் களம் முதல்… அதிமுக கூட்டம் வரை!

சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…

3 hours ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

3 hours ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago