தேதி குறிச்சாச்சு.! இந்தியாவில் களமிறங்குகிறது ரெட்மி நோட் 13 சீரிஸ்..!
பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் புத்தாண்டை சிறப்பான அறிமுகத்துடன் தொடங்க, தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரெட்மி நிறுவனம், அதன் நோட் ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்.! ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டாவின் AI.!
அதில் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ+ என மூன்று புதிய மாடல்கள் உள்ளன. இந்த மூன்று மாடல்களுமே இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ப்ரோ மாடலில் 6.67 இன்ச் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 5100 mAh பேட்டரி உள்ளது.
ப்ரோ+ மாடலில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் உள்ளது. அதே சமயம் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ+ அம்சங்கள்
- 6.67 இன்ச் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K பிக்சல் ரெசல்யூஷன்
- ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 (நோட் 13 ப்ரோ) – டைமன்சிட்டி 7200 அல்ட்ரா (நோட் 13 ப்ரோ+)
- 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைட் + 2 எம்பி மேக்ரோ
- 16 எம்பி செல்ஃபி
- 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
- 5100 mAh பேட்டரி + 67W சார்ஜிங் (நோட் 13 ப்ரோ) – 5000 mAh பேட்டரி + 120W சார்ஜிங் (நோட் 13 ப்ரோ+)
- ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14
ரெட்மி நோட் 13 ப்ரோவின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.17,499 ஆக இருக்கலாம். அதே சமயம் ப்ரோ+ மாடலின் விலை தோராயமாக ரூ.22,800 என இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.