24ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! ரெட்மியின் புதிய மாடல் என்ன தெரியுமா.?

RedmiK70Pro

ரெட்மி (Redmi) நிறுவனம் ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 29ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவற்றுடன் தனது ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் ரெட்மி கே70 ப்ரோ போனில் மட்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 இருப்பதால், இந்த கே70 சீரிஸில் முதன்மையான போனாக உள்ளது. அதோடு இந்த ப்ரோ மாடல் ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவாட்ரா கோர்ஸ் எடிஷனிலும் வெளியாகியுள்ளது.

ரெட்மி கே70 ப்ரோ விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே

ரெட்மி கே70 ப்ரோ போனில் 3200 × 1440 (2K) பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

இதனால் கேம் விளையாடுவதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் ஸ்மூத்தாகவும், வெயிலில் கூட தெளிவாக பார்க்க முடியும். பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

பிராசஸர்

அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஹைப்பர் ஓஎஸ் உள்ளது.

அல்ட்ராசோனிக் டிஸ்டென்ஸ் சென்சார், ரியர் ஃப்ளிக்கர் சென்சார், கைரோஸ்கோப், எலக்ட்ரானிக் காம்பஸ், இன்ஃபிராரெட் சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன. வைஃபை 6, புளூடூத் 5.4, டூயல் சிம் 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற அம்சங்களும் உள்ளன.

கேமரா

ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி அல்ட்ரா-க்ளியர் மெயின் கேமரா, 50 எம்பி 2x போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

செல்ஃபிக்காக பச்-ஹோல் கட்அவுட் உடன் 16 எம்பி ஸ்னாப்பர் உள்ளது. இந்த கேமரா மூலம் 720 பிக்சல் முதல் 8K தெளிவுடன் வீடியோவை பதிவு செய்யலாம். இதில் வீடியோ சூப்பர் ஆன்ட்டி சேக், பிரைவேசி ப்ரொடக்சன் வாட்டர் மார்க். டைம் லேப்ஸ் மேக்ரோ, டைம் லேப்ஸ் போட்டோகிராபி, பீக் போகஸ் மைக்ரோ மூவி, லாங் எக்ஸ்போசர், டைனமிக் போட்டோஸ் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

211 கிராம் எடை கொண்ட ரெட்மி கே70 ப்ரோ போனை அதிக நேரம் பயன்படுத்த 5000 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

பிளாக், பாம்போ மூன் ப்ளூ மற்றும் வைட் என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்ம் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என நான்கு வேரியண்ட்கள் உள்ளன.

இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் 3,299 யுவான் (ரூ.39,200) என்ற விலையிலும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் 3,599 யுவான் (ரூ.42,800) என்ற விலையிலும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 3,899 யுவான் (ரூ.46,300) என்ற விலையிலும், 24 ஜிபி ரேம் வேரியண்ட் 4,399 யுவான் (ரூ.51,699) என்ற விலையிலும் கிடைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI