ரெட்மி நிறுவனம் கடந்த 6ம் தேதி 8 ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி, 50எம்பி கேமரா கொண்ட அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 13சி 5ஜி-யை ரூ.13,499 என்ற விலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 2024 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது.
இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து நோட் 13 ப்ரோ பிளஸ் போன் குறித்த அறிவிப்புகள் அல்லது அதன் அம்சங்கள் ஏதேனும் வெளியாகுமா என்று பயனர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும் விதமாக இதே சீரிஸில் ரெட்மி 13ஆர் 5ஜி (Redmi 13R 5G) ஸ்மார்ட்போனை அமைதியாக அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டைமென்சிட்டி 6100+ சிப்செட் மற்றும் 50எம்பி டூயல் ரியர் கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ரெட்மி 13சி 5ஜி மறுபெயரிடப்பட்ட மாடல் ஆகும். இப்போது ரெட்மி 13ஆர் 5ஜி போனின் விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
இது ரெட்மி 13சி 5ஜியின் மறுபெயரிடப்பட்ட மாடல் என்பதால், 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் (17.11 செ.மீ) அளவிலான ஐபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.
ரெட்மி 13ஆர் 5ஜி போனில் மாலி-ஜி57 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு 5ஜி சிப்செட் ஆகும். 13 முதல் 30 சதவீதம் அதிக செயல்திறனை வழங்குகிறது.
இது நீண்ட நேர கேமிங் மற்றும் வேகமான நெட்ஒர்க் இணைப்புகளுக்கு உகந்ததாக இருக்கும். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. மேலும் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
கேமராவைப் பொறுத்தவரை 50எம்பி ஏஐ டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ அம்சத்துடன் கூடிய 2 எம்பி கேமரா உள்ளது. 5 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் 720 பிக்சல் முதல் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். அதோடு டூயல் சிம், 5ஜி, யுஎஸ்பி-சி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பிற அம்சங்களும் உள்ளது.
192 கிராம் எடை கொண்ட ரெட்மி 13ஆர் 5ஜி போனில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டார் ராக் பிளாக், பேண்டஸி பர்பிள், வேவ் வாட்டர் கிரீன் ஆகிய மூன்று நிறங்கள் உள்ளன.
ரெட்மி 13ஆர் 5ஜி ஆனது எல்பிடிடிஆர்4எக்ஸ் (LPDDR4x) ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. தற்போது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. இதன் விலை 999 CNY (ரூ.11,699) ஆகும். மேலும், ரெட்மி 13ஆர் 5ஜி மற்றும் ரெட்மி 13சி 5ஜி ஆகிய இரண்டு போன்களுக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், அவை வெவ்வேறு பின்புற வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…