Redmi 13C: கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியதையடுத்து, பட்ஜெட் விலையில் சிறந்த பிராசஸர், 50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது.
இதன்பிறகு விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தி, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ரெட்மி 13சி-ல் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் டாட் டிராப் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 முதல் 600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்க்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளது. முந்தைய மாடலான ரெட்மி 12சி ஆனது 6.71 இன்ச் டாட் ட்ராப் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
ரெட்மி 13சி போனில் ஆர்ம் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
ரெட்மி 12சி ஸ்மார்ட்போனிலும் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் கூடிய மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் உள்ளது. ஆனால் ஆன்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
இதில் 50எம்பி ஏஐ டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா அடங்கும். ஆனால், முன்புறம் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
முன்புறம் மற்றும் பின்புறத்திலும் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், 50 எம்பி மோட் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.
192 கிராம் எடை கொண்ட ரெட்மி 13சி போனில், அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கும்போது அதன் பாக்சில் 10 வாட்ஸ் சார்ஜ்ர் இருக்கும். 18 வாட்ஸுக்கான சார்ஜ்ர் மொபைல் ஸ்டோர்களில் விற்கப்படுகிறது.
ஸ்டார்டஸ்ட் பிளாக், ஸ்டார்ஷைன் க்ரீன் ஆகிய நிறங்களில் அறிமுகமாக உள்ளது. இதன் க்ளோபெல் வேரியண்ட் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 3 மாடல்களில் உள்ளது. இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் (ரூ.10,100) என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் (ரூ.11,200) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் (ரூ.12,500) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…