50எம்பி கேமரா..5000 mAh பேட்டரி..! ரெட்மியின் தரமான மாடல்.. என்ன தெரியுமா.?

Redmi 13C: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வந்த சியோமி, அந்த ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது.
அதன்படி, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை கடந்த நவம்பர் 3ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ரெட்மி 12சி ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இப்போது, அறிமுகத்திற்கு முன்னதாக அமேசானில் ரெட்மி 13சி போனின் அம்சங்கள் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே
ரெட்மி 13சி-ல் 1650 x 720 ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் டாட் டிராப் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது. அதோடு 500 முதல் 750 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கொண்டுள்ளது. ரெட்மி 12சி ஆனது 6.71 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் ஆர்ம் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் உள்ளன.
ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் மூலம் ஆன்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இதிலும் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டு உள்ளது.
கேமரா
கேமராவைப் பொறுத்தவரையில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா அடங்கும். முன்புறம் செல்ஃபிக்காக 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும்.
பேட்டரி
தோராயமாக 170 கிராம் எடை கொண்ட ரெட்மி 13சி ஆனது, அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 16 வாட்ஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரெட்மி 12சி-ல் 10 வாட்ஸுக்கான சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
தற்போது அமேசானில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மட்டுமே காட்சிப்படுத்தப்ப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்குப் பிறகு இன்னும் சில வேரியண்ட்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4ஜிபி ரேம் வேரியண்ட் விலை 140.54 டாலர் (ரூ.11,600) என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025