Redmi 13C [Image source : Redmi]
Redmi 13C: பட்ஜெட் விலையில் சிறந்த பிராசஸர், 50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ஒரு பக்காவான ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய அம்சங்கள் கொண்ட புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியதையடுத்து, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12சி-ன் தொடர்ச்சி ஆகும்.
இந்த ரெட்மி 13சி-ல் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் டாட் டிராப் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. அதோடு 450 முதல் 600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இதில் பாதுகாப்பிற்க்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளது. இதற்கு முந்தைய மாடலான ரெட்மி 12சி ஆனது 6.71 இன்ச் டாட் ட்ராப் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
ஆர்ம் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் ஆனது ரெட்மி 13சி போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. இதில் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
அதேபோல ரெட்மி 12சி ஸ்மார்ட்போனிலும் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் கூடிய மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் உள்ளது. ஆனால் ஆன்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
இதில் ரெட்மி 12சி-ல் இருப்பது போலவே, 50எம்பி ஏஐ டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா அடங்கும். ஆனால், முன்புறம் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் முன்புறம் மற்றும் பின்புறத்திலும் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், 50 எம்பி மோட் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.
192 கிராம் எடை கொண்ட ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில், அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனை வாங்கும்போது அதன் பாக்சில் 10 வாட்ஸ் சார்ஜ்ர் இருக்கும். 18 வாட்ஸுக்கான சார்ஜ்ர் மொபைல் ஸ்டோர்களில் விற்கப்படுகிறது. ரெட்மி 12சி-ல் 10 வாட்ஸுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
மிட்நைட் பிளாக், நேவி ப்ளூ, கிளாசியர் வைட் மற்றும் க்ளோவர் க்ரீன் ஆகிய நான்கு நிறங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 3 வேரியண்ட்கள் உள்ளன. இதில் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் NGN 98,100 (ரூ.10,100) என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் NGN 108,100 (ரூ.11,200) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் NGN 121,000 (ரூ.12,500) என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
தற்போது நைஜீரியாவில் அறிமுகமாகியுள்ள இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியா உட்பட உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…