50எம்பி கேமரா..8ஜிபி ரேம்..5000 mAh பேட்டரி.! இந்தியாவில் களமிறங்கியது ரெட்மி 13சி 4ஜி.!

Redmi 13C 4G

சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 12 சி (Redmi 12C) என்ற 4ஜி ஸ்மார்ட் போனை, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து அதே வரிசையில் ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) என்கிற ஸ்மார்ட்போனை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. அதன்படி, ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதனுடன் ரெட்மி 13சி 5ஜி மாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அறிமுகமானது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிராசஸர் மற்றும் விலையில் மட்டுமே வேறுபட்டதாக உள்ளது.

டிஸ்பிளே

ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனில் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் டாட் டிராப் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 முதல் 600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

வெறும் ரூ.9,999 பட்ஜெட்..8ஜிபி ரேம்..5000 mAh பேட்டரி.! உலகளவில் அறிமுகமானது ரெட்மி 13சி 5ஜி.!

பிராசஸர்

ஆர்ம் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் 12 நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட டியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் ஆனது ரெட்மி 13சி 4ஜி போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது.

விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன. ரெட்மி 13சி 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா

ரெட்மி 13சி 4ஜி மற்றும் 13சி 5ஜி ஆகிய இரண்டிலும் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ டெப்த் கேமரா அடங்கும். செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் முன்புறம் மற்றும் பின்புறத்திலும்  1080 பிக்சல் வரை தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். பிலிம் கேமரா, எச்டிஆர் மோட், நைட் மோட், சாஃப்ட் லைட் ரிங், போர்ட்ரைட் மோட், 50எம் மோட், டைம் லாப்ஸ் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

8.09 மிமீ தடிமன், 192 கிராம் எடை கொண்ட ரெட்மி 13சி 4ஜி போனில், அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பிடி (ஃபாஸ்ட்) சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தும் 10 வாட்ஸ் பவர் அடாப்டர் மட்டுமே பாக்ஸில் உள்ளது. இதில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 4ஜி முதல் 2ஜி நெட்ஒர்க், புளூடூத் 5.3 போன்றவை உள்ளன.

அறிமுகமே ஆகல..விலையை கசியவிட்ட அமேசான்.! ஐக்யூ-வின் புதிய மாடல்.?

ஸ்டோரேஜ்

ஸ்டார்ஷைன் க்ரீன், ஸ்டார்டஸ்ட் பிளாக் என இரண்டு நிறங்களில் வெளியாகியுள்ள ரெட்மி 13சி 4ஜி ஆனது, 8 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் (LPDDR4x) ரேம் மற்றும் 256 ஜிபி இஎம்எம்சி5.1 (eMMC 5.1) ஸ்டோரேஜ் உள்ளது. இதிலும் 4ஜி ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளது.

விலை மற்றும் சலுகை

இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.7,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் ரூ.8,999 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் ரூ.10,499 என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது. ரெட்மி 13சி 4ஜி டிசம்பர் 16ம் தேதி மதியம் 12 மணியளவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த போனை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும். ரெட்மி 13சி 4ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ எம்ஐ இணையதளம் மற்றும் அமேசானில் வாங்கிக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்