இதிலும் வந்துவிட்டதா ரீசார்ஜ் செய்யும் வசதி..!பேஸ்புக் அதிரடி..!!
தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் அதன் அவப்பெயரை போக்கும் விதமாக பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வரும் பேஸ்புக் செயலி மூலம் எளிமையாக ரீசார்ஜ் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் சார்பில் புதிய ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் என்னவென்றால் டேட்டா அப்யூஸ் பவுன்டி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப் டெவலப்பர்கள் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் ஃபேஸ்புக்கிடம் முறையிட்டால் குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தும் பேஸ்புக் செயலியின் மேல் பக்கவாட்டில் கிளிக் செய்யும் போது, ஒரு புதிய ஸ்கீரின் தோன்றும் அவற்றில் உங்களுடைய மொபைல் ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து மிக எளிமையாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
பேஸ்புக் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய ஆபஷனில் பயனாளர்களின் மொபைல் எண், தொகை, ஆகியவற்றை என்டர் செய்த பின்பு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்து ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். மேலும் விரைவில் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரித்து, அவற்றை மற்றவர்களுக்கு வழங்கும் ஆதாரங்களை சேகரிப்போருக்கு, டேட்டா அப்யூஸ் பவுன்டி என்ற திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பக் பவுன்டி திட்டம் போன்று இல்லமால், புதிய திட்டம் ஒவ்வொரு அறிக்கையின் தாக்கத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டேட்டா அப்யூஸ் பவுன்டி ஊக்கத்தொகை திட்டத்தில் 40,000 டாலர்கள் வரை வழங்கப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும். குறிப்பாக தகவல் திருட்டு உறுதிசெய்யப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி வெளியானதை தொடர்ந்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.