120Hz டிஸ்ப்ளே..8GB ரேம் உடன் புதிய 5G போன்கள்.! ரியல்மீயின் அடுத்த அதிரடி.!
ரியல்மீ நிறுவனம் அதன் சி-சீரிஸில் (C Series) ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த அறிமுகத்திற்கு முன்னதாக ரியல்மீ இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ரியல்மீ வி50 (Realme V50), ரியல்மீ வி50எஸ் (Realme V50s) என இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. இவை இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், விலையைத் ஒரே மாதிரியான அம்சங்களுடன் வருகின்றன.
ரியல்மீ வி50 மற்றும் ரியல்மீ வி50எஸ் அம்சங்கள்
ரியல்மீ வி50 மற்றும் வி50எஸ் ஆகிய இரண்டிலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொண்ட 6.72 இன்ச் சென்டர் பஞ்ச்-ஹோல் எப்எச்டி+ எல்சிடி டிஸ்பிளே உள்ளது. 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் உடன் 680 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் கொண்டுள்ள இந்த டிஸ்பிளேயில் படங்கள் பார்பார்தற்கு அருமையாக இருக்கும்.
ரெட்மி 13சி 5ஜி வாங்கப் போறீங்களா.? இந்த லிஸ்ட் பார்த்து முடிவு பண்ணுங்க.!
அதிக செயல்திறனுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. இது நீண்ட நேர கேமிங் மற்றும் வேகமான நெட்ஒர்க் இணைப்புகளுக்கு உகந்ததாக இருக்கும். அதோடு ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மீ யுஐ 4.0 (Realme UI 4.0) உள்ளது. இதே பிராஸசர் ரெட்மி 13சி 5ஜி, ரெட்மி 13ஆர் 5ஜி, ரியல்மி நார்சோ 60 x 5ஜி ஆகிய போன்களிலும் உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில், பின்புறத்தில் வட்ட வடிவ டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ கேமரா அடங்கும். அதேசமயம் முன்புறத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்ய 8 எம்பி ஸ்னாப்பர் உள்ளது. இந்த போன்கள் 7.89 மிமீ தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டவை.
நீண்ட நேர பயன்பாட்டிற்காக 18 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பிற்காக சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவை உள்ளன.
பர்பிள் டான், மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகமான இந்த இரண்டு மாடலிலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன.
பிரீமியம் டிசைன்..50எம்பி கேமரா..6,000mAh பேட்டரி.! நுபியா இசட்60 அல்ட்ரா வெளியீடு எப்போ.?
ரியல்மீ வி50 மற்றும் வி50எஸ் விலை
ரியல்மீ வி50 போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் 1,199 CNY (ரூ.13,910) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் 1,599 CNY (ரூ.18,850) என்ற விலையிலும் உள்ளது.
ரியல்மீ வி50எஸ் போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் 1,399 CNY (ரூ.16,230) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் 1,799 CNY (ரூ.20,875) என்ற விலையிலும் உள்ளது.