ஏப்ரல் 15 வரை வெய்ட் பண்ணுங்க… இந்தியாவில் களமிறங்க காத்திருக்கும் Realme!

Realme P1 5G

Realme P1 5G: ஏப்ரல் 15 ஆம் தேதி Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ரியல்மி அடுத்த வாரம் இந்தியாவில் தனது பி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் பி சீரிஸில் Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆகிய இரண்டு மாடல்கள் வரும் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Realme P-series பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ளது.  வரவிருக்கும் Realme P1 5G-இன் விலை ரூ. 15,000-க்கும் குறைவாக இருக்கும் என்பதும், Realme P1 Pro 5G ஆனது ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் Flipkart-ல் கிடைக்கும்.

வெளியான முக்கிய அம்சங்கள்:

  • Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆனது MediaTek Dimensity 7050 மற்றும் Qualcomm Snapdragon 6 Gen 1 SoCகளுடன் இயங்குகிறது.
  • Realme P சீரிஸ் போன்கள் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் AMOLED கேவுடு டிஸ்ப்ளேவை 2,160Hz PWM டிம்மிங் ரேட், 2,000 nits பீக் பிரைட்னஸ் லெவல், ProXDR ஆதரவு மற்றும் TUV சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • பின்புறம் 4 கேமராக்கள் மற்றும் முன்புறம் செல்பி கேமராவை கொண்டிருக்கும்.
  • ஹீட்டிங்கை குறைக்க VC குளிரூட்டும் அமைப்பைக் கொண்டிருக்கும்.
  • Realme P1 5G மற்றும் P1 Pro 5G ஆகியவை 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருக்கும்.
  • ரெயின்வாட்டர் டச் அம்சம் மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீடு ஆகியவை அடங்கும்.

இருப்பினும், Realme P1 5G மற்றும் P1 Pro 5G பற்றிய விலை மற்றும் மொபைலில் இருக்கும் அம்சங்கள் குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்