அதிரடி ஆஃபரில் விற்பனைக்கு வந்தது ‘ரியல்மி P சீரிஸ்’…விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!

Published by
கெளதம்

Realme P SERIES: ரியல்மி (Realme) நிறுவனம் தனது P சீரிஸான P1 மற்றும் P1 Pro என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 15ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி P1 போன் பீகாக் க்க்ரீன் (Pecock Green) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoneix Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ரியல்மி P1 ப்ரோ 5G மொபைல் ஆனது பேரட் ப்ளு (Parrot Blue) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoenix Red) ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.

Realme P1 5Gக்கான முதல் விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் realme.com மற்றும் Flipkart-ல் கிடைக்கிறது. மேலும், அதன் Red Limited விற்பனை இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கும்.

இந்த போனின் அமைப்பு, சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்க்கலாம்.

REALME P1 PRO 5G

அமைப்பு

Realme P1 5G ஆனது MediaTek Dimensity 7050 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் FHD+ (2400*1080)  6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. அதிலும் Snap Dragon 6 Gen 1 5Gயின் ப்ரோஸஸரால் இயங்குகிறது. மேலும், ரேமை அதிகப்படுத்தும் வசதியும் இதில் அமைந்துள்ளது.

Realme P1 Pro 5G

இந்த ரியல்மி P1 மாற்றம் P1 ப்ரோவின் வலது புறத்தில் வால்யூம் பட்டனும், பவர் பட்டன் உள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு முன்ஸ்க்ரீனில் மேல் புறத்தில் சென்டரில் பஞ்ச்-ஹோல் உள்ளது. அதே போல பின் புறத்தில், டிரிபிள் கேமராக்கள் மற்றும் எல்இடி (LED) ஃபிளாஷ் லைட்டுடன் அமைந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

ஸ்க்ரீன் (Screen)

ரியல்மி P1 சீரிஸ், 120 Hz அமோலெட் டிஸ்ப்ளேயுடன், 2,000 nits பீக் பிரைட்னஸ் (Brightness) இருப்பதால். இதில் 4K வீடியோவானது மிக தெளிவாக இருக்கும். மேலும், ரெயின்வாட்டர் டச் (Rainwater Touch) அதாவது மழை பெய்யும் பொழுதும் இதை நாம் உபயோகிக்கலாம் என கூறுகின்றனர்.

 கூலிங் அம்சம் 

இதனது கூலிங் திறன் 7-லேயர் VC கூலிங் சிஸ்டம் மற்றும் IP54 மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது. அதே போல ரியல்மி ப்ரோ பதிப்பு 3D VC கூலிங் சிஸ்டத்தை கொண்டு உருவாகி உள்ளது. இதனால் அதிக நேரம் நாம் போனை உபயோகித்தாலும் பெரிதாக போன் சூடாகாது என கூறுகிறார்கள்.

Realme P1 Pro

சார்ஜ் மற்றும் பேட்டரி 

இந்த ரியல் மி சீரிஸ் போன் 45W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜரோடு வருகிறது. மேலும், இந்த ரியல் மி சீரியஸின் இரண்டு போன்களும் 5000mAh பேட்டரியால் இயங்குகிறது.

கேமரா 

கேமராவை பொறுத்த வரையில் பின் புறத்தில் 50 எம்பி முதன்மை கேமராவும், 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. அதே போல முன் புறத்தில் 16 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது. இதனால் நமக்கு திருப்தி அடையும் வகையில் நம்மால் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக் கொள்ள முடியும்.

விலை மற்றும் சலுகை

இந்த ரியல்மி P1 5G (6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ்) போன் ரூ.20,999 க்கு விற்பனை தொகையாக இறங்கியுள்ளது ஆனால் முதல் நாள் சலுகையாக ரூ.5000 கழிந்து ரூ.15,999-க்கு ஃபிலிப்கார்டில் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 8ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.21,999 க்கு ஆரம்ப தொகையாக விற்பனைக்கு இறங்கியுள்ளது, ஆனால் முதல் நாள் சலுகையாக ரூ.3000 கழிந்து ரூ.18,999க்கு ஃபிலிப்கார்டில் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Realme P1 5G Series

இந்த ரியல் மி P1 5G ப்ரோ போன் (8ஜிபி ரேம், 128 ஜிபி) போன் ரூ.24,999 ரூபாய்க்கு விற்பனை தொகையாக இறங்கியுள்ளது. ஆனால், முதல் நாள் சலுகையாக ரூ.3000 சலுகையில் ரூ.21,999 ரூபாய்க்கு ஃபிலிப்கார்டில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை விற்பனைக்கு வரவுள்ளது. அதே போல 8ஜிபி, 256 ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.25,999 ரூபாய்க்கு விற்பனைக்கு இறங்கியுள்ளது. ஆனால் முதல் நாள் சலுகையாக ரூ.3000 கழிந்து ரூ.22,999 ரூபாய்க்கு  ஃபிலிப்கார்டில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை விற்பனைக்கு வரவுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

6 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago