ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme 12 Pro சீரிஸை ஜனவரி 29 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் Realme 12 Pro மற்றும் Realme 12 Pro+ ஆகிய இரண்டு மடல்கள் அடங்கும்.
ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro)
ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது. 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளேயுடன் 2412-1080 பிக்ஸலையும் இந்த போன் கொண்டுள்ளது. டிஸ்பிளே அளவு மற்றும் பிக்ஸலையும் வைத்து பார்க்கையில் இந்த போனில் வீடியோ பார்ப்பதற்கு அந்த அளவிற்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரையில், ரியல்மி 12 ப்ரோ போனானது கேமரா 50 மெகாபிக்ஸலைக் கொண்டுள்ளது. அதற்கடுத்த லென்ஸ் 32 மெகாபிக்ஸலையும் 8 மெகாபிக்ஸலையும் கொண்டுள்ளது. முன்பக்க செல்பி கேமராவை பொறுத்தவரையில், 16MP கேமரா இருக்கிறது. எனவே புகைப்படம் விரும்பிகளுக்கு இந்த போன் நல்ல போனாக இருக்கும் என கூறப்படுகிறது. பேட்டரி வசதியை பொறுத்தவரையில், 4,880mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.
ரியல்மி 12 ப்ரோ + (Realme 12 Pro +)
இதனை போலவே, ரியல்மி 12 ப்ரோ + (Realme 12 Pro +) போன் ஆனது 64MP முதன்மை கேமராவை கொண்டுள்ளது. 50 மெகாபிக்ஸலையும் 8 மெகாபிக்ஸலையும் இந்த போன் ஆனது கொண்டுள்ளது. செல்பி அதாவது முன்பக்க கேமராவை பொறுத்தவரையில், 32MP-ஐ கொண்டுள்ளது.
ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடுபவர்களே உஷார்! இந்திய சைபர் கிரைம் எச்சரிக்கை!
இந்த மாடலிலும் 4,880mAh பேட்டரி வசதி இருக்கிறது. மேலும் இந்த போன் ஆனது Qualcomm Snapdragon 7s வெர்சனில் இயங்குகிறது. எனவே, கேம் விளையாடும் கேம் பிரியர்களுக்கு கண்டிப்பாகவே இந்த போன் மிகவும் பிடிக்கும்.
ரியல்மி 12 ப்ரோ, ரியல்மி 12 ப்ரோ இரண்டு மாடல்களும் 6GB + 128GB, 8GB + 256GB, 12GB + 512GB ஆகிய ஸ்டோரேஜ்களின் அடிப்படையில் வருகிறது.
விலை மற்றும் அறிமுகம்?
இந்த இரண்டு மாடல்களும் எந்த விலையில் வரும் என்பது குறித்த விவரமான தகவல் இதுவரை வெளியாகவில்லை . மேலும், Realme 12 Pro சீரிஸை ஜனவரி 29 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் பரவி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாகவே ரியல்மி அறிவித்துள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…