5,400mAh பேட்டரி..100W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ரியல்மீ ஜிடி 5 ப்ரோவின் விலை இதுதான்.?

Realme GT 5 Pro

ரியல்மீ நிறுவனம் புதிய ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி, இந்திய நேரப்படி பிற்பகல் 11:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஆனால், அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை மற்றும் பேட்டரி அம்சங்கள் போன்றவை சீனாவில் உள்ள டிமால் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டுடன் ரியல்மீ ஜிடி 5 ஆனது அறிமுகமானது. இந்த வரிசையில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கும். இது ஜிடி 5-ன் ப்ரோ மாடல் ஆகும். இது 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

ப்ளூடூத் காலிங்..IP68 ரேட்டிங்குடன் அறிமுகம் ஆன நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்கள்.? விலை என்ன தெரியுமா.?

டிஸ்பிளே

ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் 1.5K (2780 × 1264 பிக்சல்கள்) ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் ஓஎல்இடி பிஓஇ அமோலெட் கர்வ்டு டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டிருக்கலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்காக ஐபி68 ரேட்டிங் இருக்கலாம். பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

பிராசஸர்

அட்ரினோ 740 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதை ரியல்மீ நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிப்செட் 98% ஃபாஸ்ட் பர்ஃபார்மென்ஸ், 240 எஃப்பிஎஸ் மற்றும் 40% ஹார்ட்வர்களை பூஸ்ட் செய்யக் கூடியது.

அட்ரினோ ஜிபியு 25% ஃபாஸ்டர் கிராஃபிக்ஸை வழங்கக்கூடியது. இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மீ யுஐ 5 வரலாம். ஜிடி 5 போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய சோனி LYT808 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் ஆப்டிகல் & எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் உடன் கூடிய சோனி IMX890 சென்சார் கொண்ட 50 எம்பி டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா உள்ளது.

ஓஐஎஸ் அம்சத்தினால் நடுக்கங்கள் ஏதும் இல்லாமல் புகைப்படங்களை கேப்சர் செய்ய முடியும். OV08D10 சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைட் கேமராவும் உள்ளது. முன்புறத்தில் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! சத்தமில்லாமல் அறிமுகமான டெக்னோவின் புதிய மாடல்.?

பேட்டரி

220 கிராம் எடையுள்ள ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்ப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டெரியை 0% விலிருந்து 100% சதவீதம் சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இதனால் போனை 0% விலிருந்து 100% சதவீதம் சார்ஜ் செய்ய 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது. அதோடு 50 வாட்ஸ் கொண்ட வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது உறுதியாகியுள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஆனது 16 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். அதன்படி 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 3 வேரியண்ட்டுகள் வரலாம்.

இந்த ஸ்டோரேஜை 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும். சீனாவில் உள்ள டிமால் இணையதளத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி, ரியல்மீ ஜிடி 5 ப்ரோவின் ஆரம்ப விலையானது 3499 யுவான் (ரூ.41,890) ஆக உள்ளது. இருப்பினும் விலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin
MKStalin TNAssembly
Nithyananda