தொழில்நுட்பம்

50 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் அறிமுகமாகிறது ரியல்மீ ஜிடி 5 ப்ரோ.! எப்போ தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

Realme GT 5 Pro: ரியல்மீ நிறுவனம் அதன் ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனை ரியல்மீ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து உறுதிசெய்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் அறிமுகம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இறுதியாக ரியல்மீ ஜிடி 5 ப்ரோ வெளியீட்டு தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டுடன் ரியல்மீ ஜிடி 5 ஆனது அறிமுகமானது. இதன் வரிசையில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கும். இது ஜிடி 5-ன் ப்ரோ மாடல் ஆகும்.

டிஸ்பிளே

இதில் 2780 × 1264 (2K) பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் (17.12 செ.மீ) எஃப்எச்டி+ அமோலெட் கர்வ்டு டிஸ்பிளே இருக்கலாம். ஜிடி சீரிஸ் கேமர்களுக்கு பிரத்தியேகமாக இருப்பதால் இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் முதல் 144 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டிருக்கலாம்.

இனி ரீல்ஸ் டவுன்லோட் பண்ண எந்த ஆப்ஸும் தேவையில்லை..! இன்ஸ்டாகிராம் வெளிட்ட அசத்தல் அம்சம்.!

தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்காக ஐபி68 ரேட்டிங் இருக்கலாம். ரியல்மீ ஜிடி 5 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ.43,700 என்ற விலையில் சீனாவில் அறிமுகமானது. அதில் இருக்கும் டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.

பிராசஸர்

ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதை ரியல்மீ நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மீ யுஐ 5 வரலாம். ஜிடி 5 -ல் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உள்ளது.

கேமரா

இதுவரை  நிறுவனம் வெளியிட்டத் தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய சோனி LYT808 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா,

3x ஆப்டிகல் ஜூம் மற்றும் ஆப்டிகல் & எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் உடன் கூடிய சோனி IMX890 சென்சார் கொண்ட 50 எம்பி டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா உள்ளது. OV08D10 சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைட் கேமராவும் உள்ளது. முன்புறத்தில் செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்படலாம்.

பேட்டரி

கிட்டத்தட்ட 220 கிராம் எடையுள்ள ரியல்மீ ஜிடி 5 ப்ரோவை அதிக நேரம் பயன்படுத்த 5,400 mAh பேட்டரி பொருத்தப்படலாம். இதிற் சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதோடு 50 வாட்ஸ் கொண்ட வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரலாம். பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

4,700mAh பேட்டரி..80W ஃபிளாஷ் சார்ஜிங்..12ஜிபி ரேம்..! ஒப்போவின் புது மாடல் என்ன தெரியுமா.?

ஸ்டோரேஜ் மற்றும் விலை

ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஆனது 16 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். இந்த ரியல்மீ ஜிடி 5 ப்ரோ 4,000 யுவான் (ரூ.45,823) என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

அறிமுகம்

இதன் முதல் அறிமுகமானது சீனாவில் என்று ரியல்மீ உறுதி செய்துள்ளது. அதன்படி, ரியல்மீ ஜிடி 5 ப்ரோ சீனாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி, இந்திய நேரப்படி பிற்பகல் 11:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிறகு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.! அமித்ஷா இரங்கல்…

ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…

18 minutes ago

“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…

1 hour ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு: உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!

சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…

2 hours ago

மகாராஷ்டிரா: ரயில் விபத்தில் 6 பேர் பலி? தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதிய பரிதாபம்.!

ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில்  நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…

3 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் வராது.? “நாளை நல்ல முடிவு அறிவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் உறுதி!

சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

3 hours ago