வெறும் ரூ.14,999 பட்ஜெட்.. 6ஜிபி ரேம்..5,000 mAh பேட்டரி.! அறிமுகமானது ரியல்மீ சி67 5ஜி.!

Published by
செந்தில்குமார்

ரியல்மீ நிறுவனம் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் அறிமுகம் செய்து பல பயனர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறது. இப்போது மீண்டும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் சாம்பியன் சீரிஸில் (C Series) புதிய ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மியின் சி சீரிஸில் முதல் 5ஜி போனான இதில், ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கக்கூடிய மினி கேப்ஸுல் 2.0 அம்சம் உள்ளது. 2400 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் உடன் 6.72 இன்ச் எப்எச்டி+ அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

முதல் விற்பனையில் ரூ.3000 தள்ளுபடி.! களத்தில் இறங்கியது ஐக்யூ 12 5ஜி.!

பாதுகாப்பிற்காக சைடு மௌண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் மற்றும் ஐபி54 ரேட்டிங் உள்ளது. அதிக செயல்திறனுக்காக மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ என்கிற 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ரியல்மீ சி67 5ஜி ஆனது டபுள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

அதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா அடங்கும். செல்ஃபிக்காக 8 எம்பி கேமராவும் உள்ளது. இதில் 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெறும் 29 நிமிடங்களில் 0-50% வரை சார்ஜ் செய்ய முடியும்.

விலை

ரியல்மீ சி67 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் ரூ.13,999 என்கிற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 என்கிற விலையிலும் தொடங்குகிறது. இது சன்னி ஒயாசிஸ் மற்றும் டார்க் பர்பிள் என இரண்டு வண்ணங்களில் வருகிறது.

வெறும் ரூ.6,000 பட்ஜெட்.. 4 ஜிபி ரேம்.. 4,000mAh பேட்டரி.! ஐடெல் A05s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 20ம் தேதி ரியல்மீ இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட் வழியாக முதல் விற்பனைக்கு வரவுள்ளது. அப்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்கப்படும். ஆனால் அதற்கு முன்னதாகவே ஆரம்ப அணுகல் (Early Access) டிசம்பர் 16 முதல் மதியம் 12 மணிக்கு தொடங்கும். அப்போது வாடிக்கையாளர்கள் ரூ.2,000 வரை சலுகைகளைப் பெறலாம்.

ரியல்மீ சி67 5ஜி அம்சங்கள்

  • 6.72 இன்ச் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சம்ப்ளிங் ரேட்
  • மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ பிராசஸர்
  • ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மீ யுஐ 4.0
  • 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் லென்ஸ்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா
  • 5,000 mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

Recent Posts

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

59 mins ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

2 hours ago

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் தோட்டத்தில் குண்டு வீச்சு.. பதுங்கு குழிக்குள் நெதன்யாகு?

இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான  சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…

2 hours ago

விடுதலை 2 படத்தின் ‘தினம் தினமும்’ பாடல் வெளியீடு.!

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…

3 hours ago

“2026 டார்கெட்., வெற்றியோ தோல்வியோ சண்டை செய்யணும்.!”  பா.ரஞ்சித் ஆவேசம்.!

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…

3 hours ago

மதியம் 1 மணி வரை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

3 hours ago