ரியல்மீ நிறுவனம் அதன் சாம்பியன் சீரிஸில் (C Series) புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) என்கிற பெயர் கொண்ட ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதன் அறிமுக தேதியையும் உறுதி செய்துள்ளது. இது ரியல்மியின் சி சீரிஸில் முதல் 5ஜி போன் என்று கூறப்படுகிறது.
ரியல்மீயின் இந்திய இணையதளம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் வெளியாகிய அறிவிப்பின்படி, ரியல்மீ சி67 5ஜி ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 14ம் தேதி மதியம் 12 மணியளவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள 5ஜி ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வடிவமைப்பைப் பார்க்கையில் ‘சன்னி ஒயாசிஸ்’ எனப்படும் பச்சை நிறத்தில் பிளாட் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தைக் கொண்டுள்ளது. மெட்டல் பிரேமுடன் கூடிய தட்டையான விளிம்புகளைக் கொண்டுள்ளது. வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இதன் பவர் பட்டனில் சைடு மவுன்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்படலாம்.
பின்புறத்தில் பெரிய வட்ட வடிவில் எல்இடி ஃபிளாஷுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50 எம்பி மெயின் கேமரா இருக்கும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதோடு 2 எம்பி ஏஐ கேமரா இருக்கலாம். முன்புறத்தில் பஞ்ச் ஹோல் கட்டவுட்டுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது. நீர்மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகவும் ரியல்மீ உறுதி செய்துள்ளது. அதோடு 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி என மூன்று ரேம் வேரியண்ட்களில் கிடைக்கலாம். இது பட்ஜெட் விலை போனாக இருப்பதால், ரியல்மீ சி67 5ஜி விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விவரக்குறிப்புகள் விரைவில் வெளியாகலாம் .
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…