ரியல்மீ 11 ப்ரோ 5ஜி..முன்கூட்டியே ஆர்டர் செய்தால் இது இலவசம்..! வெளியான அசத்தல் அறிவிப்பு..!

‘Realme 11 Pro 5G’ சீரிஸ் ஸ்மார்ட்போனை முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு அட்டகாசமான இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ரியல்மீ (Realme) அதன் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரிஸை இந்தியாவில் வரும் ஜூன் 8ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் நிறுவனம் அதன் வெளியிட்டிற்கு முன்னதாக, முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு அட்டகாசமான இலவச சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
????Attention #realmeFans????
Presenting the perfect blend of luxury and next-level design! Experience the power of #realme11ProSeries5G with @iamsrk on 8th June, 12 noon.
Are you ready for #TheNextLeap? #200MPzoomToTheNextLevel
Know more: https://t.co/YhMCBKPGSZ pic.twitter.com/fOahGt7itK
— realme (@realmeIndia) May 31, 2023
ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸ்:
இந்தியாவில் வரும் ஜூன் 8-ம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸில், ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+5G) என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யவுள்ளது.

ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸ் டிஸ்ப்ளே (Display):
ரியல்மி 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி சீரிஸில் அறிமுகம் செய்யப்பட உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.7 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் 360Hz தொடுதிறனையும் (touch sampling rate) கொண்டுள்ளது. மேலும் இது 1,000 நிட்ஸ் ஒளித்திறனை கொண்டுள்ளது.

ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸ் கேமரா (Camera ):
கேமராக்களைப் பொறுத்தவரை, Realme 11 Pro ஆனது 100 மெகாபிக்சல் 100MP ப்ரைமரி லென்ஸ் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸுடன் வருகிறது. அதேசமயம் Realme 11 Pro+ ஆனது 200MP ப்ரைமரி லென்ஸ், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகிய மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.

ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸ் பேட்டரி (Battery):
ரியல்மி 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி சீரிஸில் இரண்டு மாடல்களும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் Realme 11 Pro ஸ்மார்ட்போன் 67W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் Realme 11 Pro+ ஸ்மார்ட்போன் 100W சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸ் பிராசஸர் (Processor)
இந்த போன்கள் MediaTek Dimensity 7050 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 இல் Realme UI 4.0 உடன் இயங்குகிறது. ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.18,980 விலையுடனும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5 ஜி ரூ. 24,890 விலையுடனும் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகை மற்றும் ஆர்டர் தேதி:
ரியல்மீ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு ரூ.4,499 மதிப்புள்ள ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ (Realme Watch 2 Pro) இலவசமாக கிடைக்கும். இந்த இலவச வாட்சை பெறுவதற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் ஜூன் 8ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14ம் தேதி அன்று முடிவடையும். எனவே, இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஆர்வமுள்ளவர்கள் சீக்கிரமாக ஆர்டரைப் பதிவு செய்து, இலவச வாட்சை பெற்றுக்கொள்ளலாம்.
