ஆண்கள் மட்டும் படிக்கவும் : Temple Run தெரியும், அது என்ன Tampon Run?!
பலவித ஆன்லைன் விளையாட்டுகள் மலை மலையாக பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. சில கேம்கள் மட்டுமே இதில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால், இவற்றில் பல கேம்கள் எதற்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. எவ்வளவு கேம்கள் இருந்தாலும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தால் மட்டுமே அதனை மக்கள் விரும்புவார்கள்.
அப்படிப்பட்ட கேம்கள் தான் நீண்ட நாட்கள் மக்கள் மத்தியில் பேசப்படவும் செய்யும். இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கேம் தான் இந்த Tampon Run என்கிற கேம். இந்த பதிவை ஆண்கள் மட்டும் படிக்க சொன்னதற்கான காரணத்தை இனி நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
இப்படியும் கேமா!?
இந்த Tampon Run என்கிற கேம் இதுவரை ஆண்கள் விளையாடிய கேம்களை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு கேம். இந்த கேமை நியூயார்க்கை சேர்ந்த ஆண்ட்ரியா கோன்சல்ஸ் மற்றும் சோபி ஹோசெர் என்கிற இரு பெண்கள் தான் வடிவமைத்துள்ளனர். இந்த கேமில் ஒரு பெண்ணை சில ஆண்கள் துரத்தி கொண்டு வருவது போன்று அமைந்திருக்கும்.
நாப்கின்
தன்னை துரத்தும் ஆண்களிடம் இருந்து தப்பித்து வருவதே இந்த கேமின் கரு. அவ்வாறு ஓடும் போது அவருக்கு லைப்லைனாக நாப்கின்கள் கொடுக்க பட்டிருக்கும். தன்னை துரத்தும் ஆண்களிடம் இருந்து தப்பிக்க இந்த நாப்கின்களை பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அவர்களை தாண்டி குதித்து தப்பித்து ஓடலாம். இவ்வாறு ஓடும் போது துரத்தும் ஆண்களை மோதி விட்டால் 1 நாப்கின் குறைக்கப்படும். மேலும் வழியில் போனசாக கிடைக்கும் நாப்கின்களை பிடித்து கொண்டால் அவை லைப்லைனில் சேர்ந்து விடும்.
நோக்கம்!
இந்த கேமை இவர்கள் உருவாக்கியதற்கு மிக முக்கிய காரணம் உள்ளது என இந்த பெண்மணிகள் கூறுகின்றனர். அதாவது, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஆண்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த வீடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக மாதவிடாய் ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு தான் என்பதை ஆண்களுக்கு வலியுறுத்துவதே இந்த கேம்மின் நோக்கம் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.