முன்னர் வெளியான அறிக்கையின்படி, புதிய ஜிமெயில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆனது, வருகிற மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அவைகளில் மிகவும் புதிய மற்றும் அதிகம் பேசப்பட்ட அம்சங்களில் ஒன்று தான் – கான்பிடென்ஷியல் மோட் (Confidential Mode) எனப்படும் ரகசிய பயன்முறை. இந்த அம்சமானது, பெறுநர்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட இமெயில் மீதான தடைகளை செய்யும் திறன்களை கையாள விடாமல் தடுக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால், தற்போது டெக் க்ரன்ச் வெளியிட்ட ஒரு தகவலின் படி, ஜிமெயிலில் இடம் பெறவுள்ள கான்பிடென்ஷியல் மோட் என்கிற புதிய அம்சமானது, அனுப்பிய இமெயிலை ஒருவர் பார்வேட் செய்யலாமா.? கட் காப்பி பேஸ்ட் செய்யலாமா.? இமெயில் வழியாக டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்யலாமா.? என்ற ப்ச்ல்ஸ் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதோடு சேர்த்து ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ செய்யும் திறனையும் அனுப்புநருக்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுள்ள கான்பிடென்ஷியல் மோட்டை ஆக்டிவேட் செய்ய, இமெயில் முகவரி பாப்-அப் பாக்ஸில் உள்ள லாக் ஐகானை டாப் செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ இமெயிலை அனுப்ப விரும்பும் பயனர், குறிப்பிட்ட இமெயில் மீதான கடவுச்சொல்லையும் உருவாக்கலாம். அதை குறிப்பிட்ட பெருநருக்கு மட்டுமே வழங்கி இமெயிலுக்கான அணுகலை உருவாக்கலாம். பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த கான்பிடென்ஷியல் மோட் ஆனது மிக மிக ரகசியமான இமெயில்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..