ஆனால், தற்போது டெக் க்ரன்ச் வெளியிட்ட ஒரு தகவலின் படி, ஜிமெயிலில் இடம் பெறவுள்ள கான்பிடென்ஷியல் மோட் என்கிற புதிய அம்சமானது, அனுப்பிய இமெயிலை ஒருவர் பார்வேட் செய்யலாமா.? கட் காப்பி பேஸ்ட் செய்யலாமா.? இமெயில் வழியாக டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்யலாமா.? என்ற ப்ச்ல்ஸ் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதோடு சேர்த்து ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ செய்யும் திறனையும் அனுப்புநருக்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எளிமையாக கூற வேண்டும் எனில், ஒரு இமெயிலை பெறும் நபர், பெற்ற இமெயிலை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்னவெல்லாம் செய்ய கூடாது என்கிற கட்டுப்பாட்டை கான்பிடென்ஷியல் மோட் வழங்கும். மறுகையில் உள்ள ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ அம்சமானது, பெறுநரின் இன்பாக்ஸில் இருக்கும குறிப்பிட்ட இமெயில் ஆனது தன்னை தான – சத்தமின்றி -அழித்துக்கொள்ளும் ஒரு திறனாகும்.
இந்த அம்சத்தின் இன்னும் சிறப்பான பகுதி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்க்குள் படிக்க முடியாமல் போகுமாறு அல்லது அழியுமாறு கூட ஒரு பயனரால் ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ அம்சத்தை இயக்க முடியும். ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ ஆன ஒரு இமெயிலை அதன் பிறகு படிக்கவோ திறக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்டுள்ள கான்பிடென்ஷியல் மோட்டை ஆக்டிவேட் செய்ய, இமெயில் முகவரி பாப்-அப் பாக்ஸில் உள்ள லாக் ஐகானை டாப் செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ இமெயிலை அனுப்ப விரும்பும் பயனர், குறிப்பிட்ட இமெயில் மீதான கடவுச்சொல்லையும் உருவாக்கலாம். அதை குறிப்பிட்ட பெருநருக்கு மட்டுமே வழங்கி இமெயிலுக்கான அணுகலை உருவாக்கலாம். பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த கான்பிடென்ஷியல் மோட் ஆனது மிக மிக ரகசியமான இமெயில்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான புதிய ஜிமெயில் யூஸர் இன்டர்பேஸ் அம்சங்களும், வரவிருக்கும் வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.