Monalisa [file image]
VASA-1 : உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை மைக்ரோசாப்டின் புதிய AI செயலியான VASA-1 ராப் பாடல் ஒன்றை பாடவைத்துள்ளது.
உலகில் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று தான் மோனலிசா ஓவியம். இந்த ஓவியத்தை ஓவிய கலைஞரான லியோனார்டோ டா வின்சி என்பவரால் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியமாகும். சரியாக சொன்னால் கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்று பல தரப்பினர்களால் பேசப்படுகிறது. இது உலக ஓவியங்களில் சிறப்பு வாய்ந்த ஒரு ஓவியமாகும்.
அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது, தற்போது இந்த ஓவியமானது பிரான்சில் உள்ள இலூவா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அப்படியே இன்னோரு பக்கம் AI-யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட் அவர்களது புதிய AI தொழில்நுட்பத்தால் உருவான செயலியான அதாவது ஆப்பான (App) VASA -1 என்ற ஆப்பை உருவாக்கியது.
இந்த ஆப்பின் பிரத்யேக அம்சம் என்னவென்றால் ஒரு புகைப்படத்தை அசையும் அனிமேஷனாக மாற்றியமைக்கும். இதை பயன்படுத்தி நமது புகைப்படத்தை கூட நம்மால் ஏதேனும் ஒரு பாட்டிற்கு பாட வைக்க முடியும் என கூறுகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு கோனன் ஓ’பிரையனின் டாக் ஷோவில் (Conan O’Brian’s Talk Show) ஹாலிவுட் நடிகையான அன்னே ஹாத்வேயால் பாடப்பட்ட Paparazzi எனும் ராப் பாட்டை தற்போது இந்த VASA செயலி வைத்து பாட வைத்துள்ளனர்.
முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…