கேள்விகள் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருக்கும். என்னதான் கேள்விகள் நம்மிடம் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைப்பது மிக கடினம் தான். முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்போரை பார்த்து கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம். ஆனால், அவை சரியானதாக இருக்குமா என்கிற மற்றொரு கேள்வியும் நமக்கு வந்து விடும்.
இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே “கோரா” (Quora) என்கிற புதுவித வலைத்தளம் வெளிவந்தது. இதன் வருகைக்கு பின் பல மாற்றங்கள் அறிவுசார் உலகில் நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட கோரா-வில் நம் தாய்மொழி சார்ந்த ஒரு இனிய செய்தியும் வந்துள்ளது. அது என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
கோரா
நமக்குள் இருக்கும் கேள்விகளுக்கான விடையை தேடுவதற்கே இந்த தளம். அது மட்டுமில்லாமல், பிறர் கேட்கும் கேள்விக்கு நாமும் பதில் அளிக்கலாம். முடிந்தால் இந்த பதில்களுக்கு சான்றுகளையும் இதில் பதிவு செய்யலாம். மேலும், எழுத்து மூலமாகவும், குரல் மூலமாகவும் நமது கருத்தை இதில் பதிவு செய்யலாம்.
பல வசதிகள்
இதுவரை கோரா-வை மிஞ்சுவதற்கு இது போன்ற வேறு எந்த வலைத்தளமும் இன்னும் வரவில்லை என்றே சொல்லலாம். இதில் கேட்கும் கேள்விகளுக்கு அந்த துறையில் சிறப்பாக செயலாற்றும் வல்லுநர்களும் பதிலளிக்கும் படி வடிவமைத்துள்ளனர். இது போன்ற பல சிறம்பம்சங்கள் இதில் உண்டு. முன்பெல்லாம் வெறும் வலைத்தளமாக இருந்த இந்த நிறுவனம் செயலியாகவும்(ஆப்ஸ்) உருவெடுத்துள்ளது.
கோரா செயலி
இந்த செயலி பல மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தியாவில் இதற்கான பயனாளர்கள் அதிகம் இருப்பதால் இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் பெற்றுள்ளது. இதுவரை 16 இந்திய மொழிகள் இதில் ஏற்கனவே சேர்த்துள்ள நிலையில் 17-ஆவதாக தமிழும் இதில் சேரக்கப்பட்டுள்ளது.
பயன்கள்
இதனால் ஆங்கிலத்தில் கருத்துக்களை புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு பெரிதும் பயன்படும். மேலும், தமிழிலே இதில் கேள்விகளை கேட்கலாம். அத்துடன் உங்களுக்கு தெரிந்த பதில்களையும் தமிழிலேஇதில் பதிலளிக்கலாம். இதன் மூலம் உங்களுக்குள் இத்தனை நாட்களாக இருந்த பல புதிர்களுக்கான விடை கிடைத்து விடும்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…