மீண்டும் புது வடிவில் களமிறங்கும் ராணி எலிசபெத்-2 (Queen Elizabeth II)..!
வளைகுடா அரபு எமிரேட் சார்பில், ராணி எலிசபெத்-2 என்ற பயணிகள் கப்பலில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், இந்த சொகுசு உணவு விடுதி கட்டமைத்து உள்ளது.
2008-ம் ஆண்டு இந்த கப்பலை கட்டமைக்கும் பணி கடும் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது மினா ரஷீத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட இக்கப்பல், மறுநிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் உணவு விடுதி மட்டுமின்றி, திரையரங்குகள், ஐக்கிய அரபு அமீரகத்தை ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்களின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.