தொழில்நுட்பம்

ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் இந்த மாதம் வெளிவரவிருக்கும் தரமான புதிய 5G போன்கள்..!

Published by
கெளதம்

ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் புதிய 5G போன்களை வெளியிட்டு, மக்களை 5G போன்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கின்றனர். இந்த நிலையில் ரூ.30,000 பட்ஜெட் மற்றும் அதற்கு கீழே உள்ள விலையில் ஜூன் மாதம் வெளிவரவிருக்கும் சூப்பர் அம்சங்களை கொண்ட போன்களை பற்றி பார்க்கலாம்.

iQOO Neo 7 Pro [Image source : Gadgets]

iQOO Neo 7 Pro:

ஐ.கியூ.ஓ.ஓ (iQOO Neo) 7 Pro ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயங்கும். இந்த போனில் 6.7 இன்ச் AMOLED FHD+ 120Hz டிஸ்ப்ளேயுடன், 50MP பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் 16MP கேமராவும் கிடைக்கிறது.

iQOO Neo 7 Pro [Image source : Jagran]

இது 8 ஜிபி / 12 ஜிபி ரேம் உடன் இரண்டிற்கும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. போன் 120W வேகமான சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியைப் பெறுகிறது. இதன் விலை ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord 3 [Image source : Gadgets]

OnePlus Nord 3:

சீன பிராண்டான ஒன்பிளஸ் அதன் OnePlus Nord 3 ஐ ஜூன் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது OnePlus Ace 2V இன் மறு அப்டேட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் மீடியா டைமன்சிட்டி 9000 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் உயர் தெளிவுத்திறன் கொண்ட 6.72-இன்ச் முழு HD+ திரவ AMOLED டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

OnePlus Nord 3 [Image source : JMComms]

8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் மற்றும் 16GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் என இரண்டு வகையாக கிடைக்கிறது. இது 120Hz வீதம், இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் 80W SuperVOOC வேகமான சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியைப் பெறுகிறது. 50 MP ரியர் கேமரா மற்றும் 16 MP முன்பக்க கேமராவைக் கொண்ட இந்த போனின் விலை ரூ.30,000க்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 11 Pro+ [Image source: NotebookCheck]

Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+

சீன நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர், Realme நிறுவனம் ஜூன் 8 அன்று இந்தியாவில் Realme Pro தொடர் போன்களை அறிமுகப்படுத்துகிறது. Realme Pro தொடரில் இரண்டு மாடல்கள் உள்ளன, அதில் Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+ ஆகியவை வெளிவரவிருக்கிறது.

Realme 11 Pro [Image source : FimeImage]
  • இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1080 X 2412 பிக்சல்கள் 120Hz வீதத்துடன் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
  • Realme 11 Pro ஆனது 100 MP + 2 MP அரிய கேமரா மற்றும் 16 MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
  • Realme 11 Pro+ ஆனது 100 MP + 2 MP அரிய கேமரா மற்றும் 32 MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.
  • Realme 11 Pro 67W சார்ஜர் உடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடனும், அதேபோல் Realme 11 Pro+100W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகின்றன.
  • Realme 11 Pro ரூ.22,000க்கும், Realme 11 Pro+ ரூ.25,000  விலைகளில் கிடைக்கலாம்.
  • Realme 11 Pro 8ஜி பிரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
  • Realme 11 Pro+ 5ஜிபோன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
Published by
கெளதம்

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

14 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

15 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

15 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

16 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

17 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

17 hours ago