புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm!

Snapdragon 8s Gen 3

Qualcomm : சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறைந்த விலையில் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் அம்சத்தை கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read More – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை!

இந்த புதிய சிப்செட் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 இனி வரும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். அதன்படி, Snapdragon 8s Gen 3 சிப்செட் முதலில் Honor, iQOO, realme, Redmi மற்றும் Xiaomi உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என்றும் வணிக சாதனைகளுக்காக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட்டானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), மேம்பட்ட இணைப்பு, ஹைப்பர்-ரியலிஸ்டிக் மொபைல் கேமிங் மற்றும் சிறந்த ஒலி தரம் போன்ற உயர்தர அம்சங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு உயர்தர அம்சங்கள் கொண்டுவரப்படும்.

Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

பைச்சுவான்-7பி, லாமா 2 மற்றும் ஜெமினி நானோ போன்ற பிரபலமான பெரிய மொழி மாதிரிகள் (எல்எல்எம்) உள்ளிட்ட AI மாதிரிகள், கேமரா குவாலிட்டி மற்றும் பயனர் அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் இந்த இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, Snapdragon 8s Gen 3 சிப்செட்டை கொண்ட முதல் சாதனம் வெளியீடு குறித்து இந்த மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்